states

img

பாஜகவின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு : ஹேமந்த் சோரன் அரசு வெற்றி!

ராஞ்சி, செப்.5- ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்றது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஹேமந்த் சோரன் அர சுக்கு ஆதரவாக 48 உறுப்பினர்கள் வாக்களித்த னர். இதன்மூலம் ஹேமந்த் சோரன் அரசுக்கு  எதிரான பாஜக-வின் குழப்பம் விளைவிக்கும் செயல்கள் ஒருவழியாக முறியடிக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில், கடந்த 2019-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜார்க்கண்ட்  முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளைக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. 81 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவை யில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 18, ராஷ்ட்ரிய ஜனதாதளம் 1 என  இக்கூட்டணி மொத்தம் 49 இடங்கள் என அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி யமைத்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வரானார். 25 இடங்களுடன் பாஜக எதிர்க்கட்சி வரிசை யில் அமர்ந்தது. எனினும், ஏனைய எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களில் போலவே இங்கும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான வேலைகளைப் பாஜக  செய்து வந்தது.

முதலில், ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிப்பது, பின்னர் தார்மீக அடிப்படையில் சோரனை முதல்வர் பதவியி லிருந்து ராஜினாமா செய்ய வைக்கும் நெருக்கடி யை ஏற்படுத்தி, இடைப்பட்ட அவகாசத்தில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவது, ஆட்சியைக் கவிழ்ப்பது என்பதே பாஜக-வின் திட்டமாக இருந்தது. அந்த வகையில், சோரனை எம்எல்ஏ பதவியி லிருந்து தகுதி நீக்கம் செய்யும் உத்தரவை ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் ஆகஸ்ட் 27 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அனுப்பு வார் என செய்திகள் வெளியாகின. ஆனால், முன்கூட்டியே சுதாரித்துக் கொண்ட முதல்வர் ஹேமந்த் சோரன், ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி எம்எல்ஏ-க்கள் அனை வரையும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்று, பாஜக அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் பாது காப்பாக தங்கவைத்தார். மேலும் தானாகவே முன்வந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மை யை நிரூபிக்க முடிவு செய்தார்.

அதன்படி ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சோரன் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத் தின் மீது செப்டம்பர் 5-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சோரனும் வாக்கெடுப்புக்கு முந்தைய நாளிலேயே தனது  எம்எல்ஏ-க்களை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அழைத்து வந்தார். காலையில் சட்டப்பேரவை கூடியதும், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன் பாஜக-வை கடுமையாக சாடினார். “பாஜக அதிகார அரசியலை மட்டுமே செய்கிறது மற்றும் இந்து-முஸ்லிம் என்ற மத அரசியலை செய்கிறது. ஆனால், நான் ஷிபு சோரனின் மகன். இதற்கெல்லாம் நான் பயந்து போக மாட்டேன். பாஜக ஒரு முதலாளிகளின் கட்சி. அது எங்கள் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றது. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியது. ஆனால் அதில் அக்கட்சியால் வெற்றிபெற முடிய வில்லை. 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக வுக்கு நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப் பார்கள். அத்தோடு பாஜக அழிந்து போகும்” என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

பாஜக எம்எல்ஏ நீலகந்த் சிங் முண்டா பேசுகையில், “மாநிலத்தில் பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் படகு  சவாரி மற்றும் ரிசார்ட்டில் ஆடம்பர வாழ்க்கை யை அனுபவித்து வருகின்றனர். அவர்கள்  பயந்துதான் நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள், வேறொன்று மில்லை” என்று குறிப்பிட்டார். அதேபோல “தனக்கு எதிராக சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே, முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பி க்கைத் தீர்மானத்தை சபையில் கொண்டு வந்துள்ளார்” என்று மற்றொரு எதிர்க்கட்சி யான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (AJSU) தலைவர் சுதேஷ் மஹ்தோ குற்றம்சாட்டினர். இறுதியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது,  பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  வெளிநடப்புசெய்தன. அதைத்தொடர்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 48 உறுப்பினர்கள் வாக்களித்ததாக சபாநாயகர் ரவீந்திர நாத்  மஹதோ அறிவித்தார். அத்துடன் அவையை யும் ஒத்திவைத்தார்.