states

img

தனிநபர், வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்!

புதுதில்லி, செப்.14- ரிசர்வ் வங்கியிடமிருந்து நாட்டின் பிற  வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் ரெப்போ (Repo) எனப்படுகிறது. அந்த வகையில், ரிசர்வ் வங்கி  கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தனது ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவிகிதமாக உயர்த்தி யது. அப்போதே பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank - PNB), இந்தியன் வங்கி (Indian Bank) உள்ளிட்ட பல்வேறு வங்கிகள், ரெப்போவுடன் தொடர்புடைய (Repo Linked Lending Rate -RLLR) கடன்  களுக்கான வட்டியை உயர்த்த ஆரம்பித்தன.  கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற் கான கடனாகவும் தனி நபர் கடனாகவும் வழங்  கப்படும் எம்சிஎல்ஆர் கடன்களுக்கான (Marginal Cost of Funds Based Landing Rate - MCLR) வட்டி விகிதங்களும் உயர ஆரம்  பித்தன. இந்தியன் வங்கியும் “செப்டம்பர் 3 முதல்  ஓராண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவிகிதத்திற்கு பதிலாக 7.75 சதவிகிதமாக இருக்கும். ஒரு நாள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு 6.95 முதல் 7.60 சதவிகிதம் வரை இருக்கும்” என்று  அறிவித்தது.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பாங்க்  இந்தியா’ வீட்டுக் கடன்களுக்கான வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (EBLR) கடந்த  ஆகஸ்ட் 15 முதல் உயர்த்தியுள்ளது. இதன் வட்டி விகிதம் 7.55 சதவிகிதத்தில் இருந்து 8.05 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதுடன், ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன் விகி தம் 7.15 சதவிகிதத்தில் இருந்து 7.65 சதவிகித மாக உயர்த்தப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (EBLR) 7.90 சத விகிதமாக உயர்த்தியுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் ரெப்போவுடன் தொடர்புடைய வட்டி  விகிதத்தை 7.40 சதவிகிதத்தில் இருந்து 7.90 சத விகிதமாக அதிகரித்துள்ளது. கனரா வங்கி அதன் ரெப்போ விகிதத்து டன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை 50 அடிப்  படை புள்ளிகள் அல்லது 7.80 சதவிகிதத்தில் இருந்து 8.30 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 7, 2022-க்கு பிறகு புதிய கடன்  விகிதத்தை அமல்படுத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியானது, எம்சிஎல்ஆர் கட னுக்கான வட்டி விகிதத்தை 7.65 சதவிகிதத்தில் இருந்து 7.75 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 3 மாதங்களுக்கு 7.80 சதவிகிதமாகவும், ஆறு  மாதங்களுக்கு 7.95 சதவிகிதமாகவும் கட்டணங்  களை மாற்றியமைத்துள்ளது.

இதனிடையே, பாங்க் ஆப் பரோடா, இந்தி யன் ஓவர்சீஸ் வங்கிகளும் தங்களின் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது கடன் களுக்கான வட்டி விகிதங்களை அனைத்து தவணைக்காலக் கடன்களுக்கும் 0.10 சதவிகி தம் வரை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித  உயர்வு சனிக்கிழமை (செப். 10) முதல் அம லுக்கு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஓராண்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் தற்போ துள்ள 7.65 சதவிகிதத்திலிருந்து 7.75 சதவிகித மாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு மற்றும்  மூன்று ஆண்டு கடன்களுக்கான வட்டி விகித மும் 7.80 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்துக்கும் குறைந்த கால கடன்  களுக்கு வட்டி விகிதம் 7.05 சதவிகிதமாகவும் ஒரு மாதத்துக்கான வட்டி விகிதம் 7.15 சதவிகி தமாகவும், மூன்று மற்றும் ஆறு மாத கடன்களுக்  கான வட்டி விகிதம் 7.70 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

‘பாங்க் ஆப் பரோடா’ வங்கிக் கடன்களுக்  கான வட்டி விகிதத்தை 0.05 சதவிகிதம் முதல் 0.20 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட் (BRLLR) அதி கரித்துள்ளதால் பாங்க் ஆப் பரோடாவின் சில்லரை கடன்களுக்கான வட்டி விகிதம் 7.95 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. பரோடா வங்கியின் ஓராண்டுக்கான கடன் வட்டி விகிதம் 7.70 சதவிகிதத்திலிருந்து 7.80 சத விகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு மாத  கடன்களுக்கு 7.55 சதவிகிதத்தில் இருந்து  7.65 சதவிகிதமாக வட்டி விகிதம் அதிகரிக்கப் பட்டுள்ளது. மூன்று மாத கடன்களுக்கான வட்டி விகிதம் 7.45 சதவிகிதத்திலிருந்து 7.50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 12 முதல்

அமலுக்கு வந்துள்ளன.

இதனால் தனிநபர், வீடு, வாகனக் கடன் போன்றவற்றிற்கான வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளதோடு மாதந்தோறும் கடன் களுக்கு கட்டப்படும் இஎம்ஐ (EMI) தொகை களும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் மீண்டும் அதிக ரித்துள்ளதால், ரிசர்வ் வங்கியின் எதிர்வரும் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ விகிதம் மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந் துள்ளதால் வரும் மாதங்களில் பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன; எனவே ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியில் எந்தவித மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

;