states

img

ம.பி.யில் கிறிஸ்தவப் பள்ளியை சூறையாடிய பஜ்ரங் தள் கும்பல்!

போபால், டிச.7- மத்தியப் பிரதேச மாநிலத்தி லுள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றை, அங்குள்ள பஜ்ரங் தள், விஎச்பி கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது.  மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கன்ச் பசோடா எனும் பகுதியில் செயிண்ட் ஜோசப் என்ற கிறிஸ்தவ பள்ளி செயல்பட்டு வருகிறது. கிறிஸ்துவ மிஷனரியால் நடத்தப்பட்டு வரும் இந்த பள்ளியில் பயிலும் இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை மாண வர்கள் 8 பேர் அண்மையில் கிறிஸ் தவ மதத்திற்கு மாற்றப்பட்டதாக, சில உள்ளூர் செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தக வல் பரப்பப்பட்டுள்ளது. பின்னர் இதையே காரணமாக வைத்து, திங்களன்று மாலை செயிண்ட் ஜோசப் பள்ளி முன்பு திரண்ட பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த இந்துத்துவா கும்பல் பள்ளியின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். அங்கிருந்த பொருட்க ளையும் அடித்து நொறுக்கியுள்ளனர்

நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது, பள்ளிக்கு உள்ளே பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதத் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருந்ததாக கூறப்படு கிறது. அப்போது, பஜ்ரங் தள், விஎச்பி கும்பல் வீசிய கற்களால் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி தேர்வு அறைக்குள் விழுந்ததால் மாணவர்கள் அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். எனினும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாதுகாப் பான இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்துள்ளனர். இந்துத்துவா கூட்டத்தின் இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ள நிலையில், மதமாற்றம் தொடர்பான புகாரை பள்ளியின் தாளாளர் சகோதரர் அந்தோணி மறுத்துள்ளார். தங்கள் பள்ளி யிலோ அல்லது அது சார்ந்த தேவா லயத்திலோ மதமாற்றம் நடைபெற வில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், இது போன்ற சம்பவம் ஏற்படும் சாத்தி யக்கூறுகள் இருப்பதாக காவல் துறை, மாவட்ட நிர்வாகம், சிபி எஸ்இ மண்டல அலுவலகம் ஆகிய வற்றுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தும் யாரும் சரியான நேரத்தில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் சகோதரர் அந்தோணி முன்வைத்துள்ளார். மறுபுறத்தில், பஜ்ரங் தளத்தின் உள்ளூர் தலைவரும், தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களில் ஒரு வருமான நிலேஷ் அகர்வால் அளித் துள்ள பேட்டியில், “மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் விசா ரணையில் மதமாற்றம் நடந்தது உறுதியானால், இந்த பள்ளியை இடித்துத் தள்ள வேண்டும்” என்று அராஜகமாக கூறியுள்ளார். “பள்ளி அமைந்திருக்கும் நிலத்தை ராஜேஷ் மாத்தூர் என்ற கொடை யாளர் மருத்துவமனை அமைக்கத் தான் கொடுத்தார். ஆனால் இன்று தவறான காரணங்களுக்காக இந்த இடம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவரிடம் நிலத்தை திரும்பப் பெறு மாறு வலியுறுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

;