தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஒன்றிய அமைச்சர்களுடன் பயணம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதே சத்தின் இடாநகரில் உயர்நீதி மன்ற கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங் கேற்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஒன் றிய அமைச்சர் கள் கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம்மேக் வால் ஆகியோருடன் இடாநகருக்கு தனியார் ஜெட் ஒரே விமானத்தில் சென் றுள்ளார். அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தக் காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர் ந்துள்ளார். ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான முக்கியமான பிரச்சனைகள் குறித்த தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் அறிவிக்கப்படவிருக்கும் போது, ஒன்றிய அமைச்சர்களுடன் தலை மை நீதிபதி தனியார் ஜெட் விமானத்தில் வருவது பொருத்தமற்றது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.