சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தல் எதுவாக இருந்தாலும் பிரதமர் மோடி ஏதோ ஒரு ஜோசியக்காரர் போன்று, பாஜக இத்தனை தொகுதிகளிலும் வெல்லும் என பொத்தம் பொதுவாக அடித்து விடுவது வழக்கம். அதே போன்று வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 முதல் 400 தொகுதிக்கு மேல் வெல்லும் என மோடி கூறி வருகிறார். அவ்வளவு தான் பாஜகவினர் இதனை கடவுளின் வாக்குப் போன்று தாங்கள் செல்லும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் 400 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்று வோம் என பேசி வருகின்றனர். வாங்கும் சலுகை களுக்காக பாஜக ஆதரவு ஊடகங்களான “கோடி மீடியாக்கள்” ஏதோ கருத்துக்கணிப்பு மூலம் ஆய்வு நடத்தியது போன்று, 18ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என தங்கள் பங்கிற்கு கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் பிரதமர் மோடி கூறியது ஒருமுறை கூட நிகழ்ந்தது இல்லை என ஆதாரங்களுடன் காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் போட்டுடைக்க, இந்த விவகாரம் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி யுள்ளது.
1. 2017இல் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் மோடி, பாஜக 150 இடங்களை கைப்பற்றும் என்று கூறினார். ஆனால் கிடைத்ததோ வெறும் 99 தொகுதிகள் தான். 2. 2018 சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளை வெல்லும் என கூறப்பட்ட நிலையில், வெறும் 15 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. 3. 2019 ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக 65 தொகுதிகளை கைப்பற்றும் என மோடி கூறிய நிலையில், பாஜக 30 இடங்களைக்கூட கைப்பற்ற முடியாமல் 25 தொகுதிகளில் சுருண்டது. 4. 2020இல் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் 45 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றுவோம் என மோடி சூளுரைத்தார். ஆனால் 10 தொகுதிகளில் கூட வெல்ல முடியாமல் வெறும் 8 இடங்களுடன் பாஜக அடி வாங்கியது. 5. கடைசியாக 2021இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 118 இடங்களை கைப்பற்றும் என்றும், இதில் பாஜக அதிக இடங்களை வெல்லும் என்றும் மோடி கூறினார். ஆனால் பாஜகவிற்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் தான் 12 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த குஜ ராத்தில் கூட மோடியின் கணிப்புகள் பலித்தது இல்லை என்பதுதான். இவ்வாறு பல்வேறு தேர்தல்களில் “மோடி அண்ட் பாஜக கம்பெனியின்” சூளுரைகள் பலித்தது கிடையாது என்ற நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மோடியின் வீரவசனங்களுக்கும் அதே கதிதான் என்பது உறுதியாகியுள்ளது.