states

img

அனைத்து ஒப்பந்தங்களும் உறவினர்களுக்கு அளிப்பதா? அருணாச்சல் பாஜக முதலமைச்சர் குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து ஒப்பந்தங்களும் உறவினர்களுக்கு அளிப்பதா? அருணாச்சல் பாஜக முதலமைச்சர் குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுதில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிர தேசத்தில் பாஜக ஆட்சி  நடைபெற்று வருகிறது. முதலமைச்ச ராக பேமா காண்டு உள்ளார். முதலமைச்சர் பேமா காண்டு மாநில அரசின் அனைத்து ஒப்பந் தங்களையும் உறவினர்களுக்கு வழங்கப்படுவதாக “சேவ் மோன் பிராந்திய கூட்டமைப்பு” குற்றம்சாட்டி யது. இந்த குற்றச்சாட்டில் பேமா காண்டுவின் மனைவிக்குச் சொந்த மான கட்டுமான நிறுவனமான பிராண்ட் ஈகிள்ஸுக்கு ஒப்பந்தம்டெண்டர் இல்லாமல் வழங்கப்பட்டது. அதே போல பேமா காண்டுவின் தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான டோர்ஜி காண்டுவின் இரண்டாவது மனைவியுமான ரிஞ்சின் டிரேமா மற்றும் மருமகன் செரிங் தாஷி எம்எல்ஏவும் ஒப்பந்தங்களைப் பெற்றனர். அதனால் இந்த விவகா ரம் தொடர்பாக சிறப்பு புலன் விசார ணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்த ரவிட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் சேவ் மோன் பிராந்திய கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு,  இந்த வழக்கில் ஒன்றிய அரசு ஒரு தரப்பு அல்ல என்ற வாதத்தை நிரா கரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தர விட்டனர். மேலும், ஒன்றிய உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 18 அன்று அமைச்சகங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், அவை தங்கள் அறிக்கைகளை சமர்ப் பிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரி வித்தனர். காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தபோது 43 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்த பேமா காண்டு, இன்று வரை முதலமைச்ச ராக தொடர்கிறார் என்பது குறிப்பி டத்தக்கது.