states

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் காண்ட்ராக்டை தனியாருக்கு தரும் ரயில்வே!

புதுதில்லி, செப்.10- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make In India) திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் வகையிலான ஆலை யை நிறுவ, ரயில்வே நிர்வாகம் முதல்முறையாக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரி யுள்ளது. இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தில்லியில் செய்தியா ளர்களிடம் கூறியிருப்பதாவது: ரயில் சக்கரங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியாவை மாற்ற புதிய செயல்திட்டம் வகுக்  கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ரயில் சக்க ரங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மூலப் பொருள்கள் கிடைக்கப்  பெறுவதை கருத்தில் கொண்டு, முழுமையான  தொழில்நுட்ப ஆய்வு மற்றும் ஆலோசனை களுக்கு பிறகே முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில், அதிவேக ரயில்களுக் கா0ன சக்கரங்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவி,  ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80 ஆயிரம் சக்கரங்கள் தயாரிக்க முதல் முறையாக தனியார் நிறுவனங்க ளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்குள் ஆலையை நிறுவ  வேண்டும்; உற்பத்தி மட்டுமன்றி ஏற்றுமதியாள ராகவும் செயல்பட வேண்டும்; ஏற்றுமதி சந்தை  ஐரோப்பிய நாடுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் வழங்கப்படும். அதே போல், ஆண்டுக்கு ரூ. 600 கோடியில் 80 ஆயிரம்  சக்கரங்களை தனியாரிடம் கொள்முதல் செய்வ தற்கான உறுதிமொழியும் அரசு சார்பில் அளிக் கப்படும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்திய ரயில்வேக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரயில் சக்கரங்கள் தேவை என்ற நிலையில், புதிய திட்டத்தின்கீழ் சுமார் ஒரு லட்சம் சக்கரங்களை இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் (செயில்) தயாரித்து வழங்கும். மீதமுள்ள சக்கரங்கள் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் நிறு வப்படும் தனியார் ஆலையிலிருந்து பெறப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

;