போபால், செப்.26- நாற்காலியில் அமர்ந்ததற்காக, தலித் இளைஞர் மீது தாக்குதல் நடத் தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சத்தார்பூர் மாவட்டம் சவுக் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட் டத்தில் ‘கபில்தரா யோஜனா’ திட்டத் தின் பயனாளர்கள் பங்கேற்றுள்ளனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த 35 வய தான ஹல்லு அஹிர்வார் எனும் இளை ஞரும் பங்கேற்றுள்ளார். கூட்டத்திற்கு வந்த ஹல்லு நாற்காலியில் அமர்ந்தி ருக்கிறார். அப்போது ரோஹித் சிங் தாக்குர் எனும் மற்றொரு இளைஞர், ஹல்லு நாற்காலியில் அமர்ந்திருந் ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். ஒரு தலித் எவ்வாறு எல்லாருக்கும் சம மாக நாற்காலியில் உட்காரலாம் என்று கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
அங்கிருந்தவர்கள் ரோஹித் சிங் தாக் கூரைத் தடுத்து, அனுப்பி வைத்துள்ளனர். எனினும், ஆத்திரம் அடங்காத ரோஹித் சிங் தாக்குர், அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஹல்லு வின் வீட்டுக்கு கூடுதலாக இரண்டு பேரு டன் சென்று ஹாக்கி மட்டையால் ஹல்லுவைக் கடுமையாகத் தாக்கி யுள்ளார். இதில், ஹல்லுவின் மண்டை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்துள் ளது. ஹல்லுவின் கை, கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. தற்போது ஹல்லு, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு நேர்ந்த சாதிவெறித் தாக்கு தலை, இரண்டு குடும்பங்களுக்கு இடை யிலான முன்பகையாக காட்டி, குற்ற வாளிகளை தப்பவிட காவல்துறை யினர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி யுள்ளார்.