ஜம்மு- காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் உள்ள பனி ஊற்றை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வரு கின்றனர். நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 1 அன்று தொடங்கியது. புதனன்று பகவதி நகர் முகாமில் திடீ ரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அமர்நாத் பயணிகளின் பாதுகாப்பு கருதி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட் டது. இந்நிலையில், வியாழனன்று காலை முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது.