states

img

12 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் பன்முக நாகரிகங்களின் வளர்ச்சி

புதுதில்லி, அக். 11 - மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்து- கடந்த 12 ஆயிரம் ஆண்டுகால இந்தியா வின் முழுமையான நாகரிக மற்றும் வரலாற்று சகாப்தங்களின் வளர்ச்சியை ஆய்வு செய்து தொகுப்பதற்கான விரிவான பணி துவங்கியிருக்கிறது. இந்தப் பணியில் உலகின் தலைசிறந்த மரபணுவியல் ஆய்வாளர்கள், தொல்லி யல் ஆராய்ச்சியாளர்கள், மானுடவியல் அறிஞர்கள், மொழியியல் பேராசிரியர்கள், வரலாற்றியல் அறிஞர்கள் மற்றும் பல்வேறு சமூக அறிவியல் துறைகளின் வல்லுநர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்த மாபெரும் பணியை இந்தி யாவின் வரலாற்றியல் ஆராய்ச்சி மையங் களில் ஒன்றான பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் துவக்கியுள்ளது. இப்பணியை வரலாற்றியல் அறிஞர் களில் ஒருவரான ஜி.என்.டேவி ஒருங்கி ணைக்கிறார். விரிவான ஆராய்ச்சிகளின் குறிப்புகளை ஜி.என்.டேவி, டோனி ஜோசப், ரவி கோரிசெட்டர் ஆகிய அறிஞர்கள் தொகுக்கிறார்கள்.

இந்த மாபெரும் திட்டத்தில் அமெரி க்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும், அண்ணல் காந்தியடிகளின் பேரன்களில் ஒருவருமான பேராசிரியர் ராஜ்மோகன் காந்தி, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹன்ஸ் ஹென்ரிச் ஹாக், பெர்க்லியில் உள்ள கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்  வினய் லால், தில்லி ஷிவ்நாடார் பல்கலைக்கழகம் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றும் சுதேஷ்னா குஹா, பத்திரிகையாளரும், வரலாற்று அறிஞரு மான டோனி ஜோசப், புனேயில் உள்ள  சாவித்திரிபாய் பல்கலைக்கழக பேராசிரி யர் மகேஷ் தியோகர், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ ஒல்லெட் ஆகியோர் இணைந் திருக்கிறார்கள்.  பம்பாயில் உள்ள இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவன பேராசிரியர் ஓம்  தமனி, பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக் கழக பேராசிரியர் ராஷ்மி சகானி ஆகி யோர் வெளியீட்டுப் பணிகளை கவனிக்க இருக்கிறார்கள். இந்தியாவின் ஒருங்கிணைந்த வர லாற்றை உருவாக்கும் இந்த பிரம்மா ண்ட திட்டத்தின் துவக்க நிகழ்வில் மேற்கண்ட அறிஞர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்றார். “12 ஆயிரம் ஆண்டுகால இந்தியாவின் மிக மிக வளமிக்க, மிக விரிவான பன் முகத் தன்மைவாய்ந்த நாகரிகங்களின் வர லாற்றை முழுமையாக ஆவணப்படுத்தும் மிகப்பெரிய பணியில் நமது தலை சிறந்த சிந்தனையாளர்கள் இறங்கியிருக் கிறார்கள். இந்தத்  திட்டத்தோடு இணைந்து நிற்க வேண்டியது நமது கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

;