states

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ. 2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

புதுதில்லி, ஜூலை 22 - கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு  விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 2 ஆயிரத்து 700 கோடி அளவிற்கான தொகையை செல விட்ட நிலையில், இந்த தொகை, ஓராண்டில் 8 வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு இணையான ஒன்றாகும்  என விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்  தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய மான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்த னர். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு  விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை  எவ்வளவு? என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்டு இருந்தது. இதற்கு ஒன்றிய அரசு தற்போது பதில ளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் விளம்பரச் செலவு ரூ. 2 ஆயி ரத்து 700 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்  ளது. கடந்த 2014 - 2015 நிதியாண்டில் அச்சு ஊட கங்களுக்கு ரூ. 424.84 கோடி, மின்னணு ஊட கங்களுக்கு ரூ. 473.67 கோடி செலவிடப்பட்டுள் ளது. இதேபோல, 2015 - 2016 நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ. 508.22 கோடி, மின்  னணு ஊடகங்களுக்கு ரூ. 531.60 கோடி, 2016 -  2017 நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ. 468.53 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.  609.15 கோடி, 2017 - 2018 நிதியாண்டில் அச்சு ஊட கங்களுக்கு ரூ. 636.09 கோடி, மின்னணு ஊட கங்களுக்கு ரூ. 468.92 கோடி, 2018 - 2019 நிதி யாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ. 429.55 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ. 514.28 கோடி என செலவிடப்பட்டுள்ளது.

2019 - 2020  நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ. 295.05 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு ரூ.  317.11 கோடி, 2020 - 2021 நிதியாண்டில் அச்சு ஊட கங்களுக்கு ரூ. 179.04 கோடி, மின்னணு ஊட கங்களுக்கு ரூ. 101.24 கோடி என செலவிடப் பட்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் அச்சு மற்றும் மின் னணு ஊடகங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 2 ஆயிரத்து 700 கோடி செலவிடப்பட்டு உள்  ளது. இந்நிலையில்தான், ஓராண்டில் 8 வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப் படும் நிதிக்கு இணையான தொகையை, மோடி  அரசு விளம்பரங்களுக்கு அள்ளி வீசியிருப்ப தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த 2022 நிதியாண்டில் 8 வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மொத்தமே ரூ. 2 ஆயிரத்து 755 கோடியைத்தான் மோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சராசரியாக ரூ. 344.3 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த  வகையில், ஒன்றிய பாஜக அரசு ஓராண்டு விளம்  பரத்திற்கு செய்யும் தொகையை விட குறை வாகவே வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி  ஒதுக்கீடு செய்வதாக சமூக செயற்பாட்டா ளர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.