states

img

பள்ளிக் கட்டடம் இடிந்ததில் 7 குழந்தைகள் பலி காயமடைந்த குழந்தைகளையும் கைவிட்ட ராஜஸ்தான் பாஜக அரசு

காயமடைந்த குழந்தைகளையும் கைவிட்ட ராஜஸ்தான் பாஜக அரசு

சிபிஎம் பிரதிநிதிகள் குழு கடும் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல மைச்சராக பஜன்லால் சர்மா உள்  ளார். இவர் கல்வியை மேம்படுத்து வதற்கு பதிலாக, கல்வி நிலைய சுவர்களில் காவி வண்ணம் அடிக் கவே தீவிரமாக  பணியாற்றி வரு கிறார். இத்தகைய சூழலில்,  கடந்த ஜூலை 25ஆம் தேதி ஜலாவார் மாவட்டம் மனோகர்தனாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளி யின் கட்டிடம் இடிந்து விழுந்தது.  இந்த கோர விபத்தில் 7 குழந்தை கள் பலியாகினர். படுகாயமடைந்த  28 குழந்தைகள் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றன.  பலியான மற்றும் படுகாயமடைந்த  குழந்தைகளில் பெரும்பாலா னோர் தலித் மற்றும் பழங்குடி வகுப்  பைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிபிஎம் பிரதிநிதிகள் ஆய்வு இந்நிலையில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கிஷன் பாரிக் தலை மையிலான பிரதிநிதிகள் குழு, பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த  மனோகர்தனா பகுதி மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீடு களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். தொடர்ந்து சிபிஎம் பிரதி நிதிகள் குழு ஜலாவார் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று காய மடைந்த குழந்தைகளின் நிலையை  ஆய்வு செய்தனர்.  மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் 10  குழந்தைகளில் ஒருவரைத் தவிர  மற்ற அனைவரும் பீல் என்ற பழங் குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக கோட்டா மருத்  துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தையின் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது  என சிபிஎம் பிரதிநிதிகள் குழு மூலம்  செய்திகள் வெளியாகியுள்ளன.  இதில் வருத்தத்துக்குரிய விஷ யம் என்னவென்றால் இந்த மனம் பதைக்கும் சம்பவம் நிகழ்ந்து 10 நாட்கள் கடந்தும் ராஜஸ்தான் பாஜக அரசின் முதலமைச்சர் மற்  றும் கல்வி அமைச்சர் இன்னும்  நிகழ்விடத்தை பார்வையிட வில்லை. உயிரிழந்த குழந்தை களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் ரூபாய் மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்  காயமடைந்தவர்களின் குடும்பத்தி னருக்கு எந்த நிவாரணமும் அறி விக்கப்படவில்லை. இத்தகைய சூழலில், இந்த அலட்சியத்தை கடு மையாகக் கண்டிக்கிறோம். உட னடி நடவடிக்கை வேண்டும் என  மனோகர்தனாவில் ஆய்வு மேற் கொண்ட சிபிஎம் பிரதிநிதிகள் குழு  கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஎம் பிரதிநிதிகள் குழுவில் மாநில செயற்குழு உறுப்பினரும், பழங்குடியினர் உரிமைகள் தேசிய முன்னணி மாநில தலைவ ருமான துலிச்சந்த் மீனா, மாநில செயற்குழு உறுப்பினரும், முன்  னாள் சட்டமன்ற உறுப்பினரு மான பெமாராம், கோட்டா மாவட்டச் செயலாளர் ஹபீப்கான்  உள்ளிட்டோரும் இடம் பெற்று  இருந்தனர் என்பது குறிப்பிடத்தக் கது.