states

img

குஜராத்தில் 40 ஆயிரம் பெண்களைக் காணவில்லை

அகமதாபாத், மே 7- குஜராத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை 40 ஆயிரம் பெண்களைக் காண வில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தில் 2016-ஆம் ஆண்டில்  7,105 பேர், 2017-ஆம் ஆண்டில் 7,712  பேர், 2018-ஆம் ஆண்டு 9,246 பேர்  என மொத்தம் 24,063 பேர் காணா மல் போயுள்ளதாக தேசிய குற்ற  ஆணவக் காப்பகத்தின் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர 2019-ஆம் ஆண்டு 9,268 பெண்கள், 2020-ஆம் ஆண்டு 8,290  பெண்கள் காணாமல் போயுள்ள தாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  இணையதளம் குஜராத் மாநில  நிலைமையை அம்பலப்படுத்தி யுள்ளது. தற்செயலாக, 2021-ஆம் ஆண்டு  சட்டமன்றத்தில் மாநில அரசு வெளி யிட்ட அறிக்கையின்படி, அகமதா பாத் மற்றும் வதோதராவில் ஒரு  வருடத்தில் (2019-20) 4,722 பெண் கள் காணாமல் போயுள்ளனர் என வும் அந்த இணையதளம் கூறு கிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும்,  குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா,‘‘காணாமல் போன சில  வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் எப்போதாவது குஜ ராத்தைத் தவிர மற்ற மாநிலங்க ளுக்கு அனுப்பப்பட்டு விபச்சா ரத்தில் தள்ளப்படுவதை நான் அவ தானித்துள்ளேன்’’ என்கிறார். ‘‘காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை தீவிரமா கக் கையாலாததுதான் காவல்துறை யின் பிரச்சனை.

இது போன்ற வழக்  குகள் கொலையை விடத் தீவிர மானவை. ஏனென்றால், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்  றோர்கள் தங்கள் குழந்தைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கி றார்கள், காணாமல் போன வழக்கை ஒரு கொலை வழக்கைப் போல கடு மையாக விசாரிக்க வேண்டும்’’ என்று அவர் மேலும் கூறியுள்ளார். முன்னாள் கூடுதல் காவல்துறை  இயக்குநர் டாக்டர் ராஜன் பிரிய தர்ஷி கூறுகையில், ‘‘சிறுமிகள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம். “எனது பத விக் காலத்தில், காணாமல் போன பெண்களில் பெரும்பாலோர் சட்ட விரோத மனிதக் கடத்தல் குழுக் களால் அவர்களை வேறு மாநி லத்திற்கு கொண்டு சென்று விற்  பனை செய்வதை நான் அவதா னித்தேன்’’. ‘‘கேடா மாவட்டத்தில் நான் காவல் கண்காணிப்பாளராக  இருந்தபோது, அந்த மாவட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஏழைப் பெண்ணைத் தூக்கிச் சென்று, தனது சொந்த மாநிலத்தில் விற்று, வேலைக்குச் சேர்த்து, அங்கேயே பணிபுரிந்தார். நாங்கள் அந்தப் பெண்ணை மீட்க முடிந்தது, ஆனால் இது பல சந்தர்ப்பங்களில் நடக்காது’’ என்கிறார். குஜராத் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர்  கூறுகையில், ‘‘கேரளா வில் பெண்களைப் பற்றி பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால், நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000-க்கும் மேற்பட்ட பெண்களைக் காணவில்லை’’ என்றார்.