states

img

‘நீதித் துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்’

‘நீதித் துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்’

புதிய தலைமை நீதிபதி உறுதி

சென்னை,  ஜூலை 22 - சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தலைமை நீதிபதியாக அல்லாமல் பணிவான சேவகனாக பணியாற்றி  நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக உறுதி அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் புதிய தலைமை நீதி பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழகத்தின் பெருமைகளையும் சென்னையின் வளமையையும் 163 ஆண்டு பழ மையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும் விளக்கி, நீதி பரி பாலனத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தார். ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, “1892 ஆம்  ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவியை பெற்றுக் கொண்ட  அப்போதைய தலைமை நீதிபதி சர் ஆர்தர் கோலன், எந்த பாகுபாடும்  இல்லாமல் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்  என்று நினைவு கூர்ந்தார். அந்த மரபை உறுதி செய்யும் வகையில் சேவ கனாக பணியாற்றுவதாகவும், மக்களின் உரிமைகளை பாதுகாக்க, திறமையான வெளிப்படைத் தன்மையுடன் நீதி நிர்வாகம் நடத்தப்படும்  என்றும், வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவதாகவும்” அவர் உறுதி தெரிவித்தார்.