states

ஜனநாயக இயக்கங்களுக்கு தடை போட்ட காவல் துறைக்கு தண்டனை

சென்னை, செப்.24-   உண்ணா நிலைப் போராட்டத் திற்கு அனுமதி கேட்டதற்காக மாநில துணைத் தலைவரை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்திய ஈரோடு நகர காவல்துறையினரை மனித உரிமை ஆணையம்  கண்டித்து,  அபராதம் விதித்துள்ளதை தமிழ்நாடு  சிறுபான்மை மக்கள் நலக்குழு  வரவேற்றுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முக  மது, மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் போராட்டம் நடத்த தடை  விதித்ததைக் கண்டித்து உண்ணா நிலைப் போராட்டத்திற்கு அனுமதி கேட்டதற்காக மாநில துணைத் தலைவர் பா.மாரிமுத்துவை மனிதத் தன்மையற்ற முறையில் நடத்திய ஈரோடு நகர காவல்துறையின் செயலை கண்டித்ததுடன், 25 ஆயி ரம் ரூபாய் அபராதம் விதித்தும் மனித  உரிமை ஆணையம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்கிறது. இத்தீர்ப்பு மக்களின் குரல் பொது வெளியில் சட்டத்திற்கு உட்பட்டு வெளியிடுவதற்கான உரிமையை உறுதி செய்யும் என்று சிறுபான்மை மக்கள் நலக்குழு நம்புகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்  தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு 30.1.2019 அன்று சிறுபான்மை மக்கள்  நலக்குழு சார்பில் ஈரோட்டில் அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடத்தவிருந்த கூட்ட  அரங்கத்தை  காவல்துறை பூட்டி கூட்டத்திற்கு இடையூறு செய்தது.   இதேபோல தொடர்ந்து அனுமதி மறுக்கும் ஈரோடு காவல்துறையின் ஜனநாயக விரோத  செயல்களை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் குழுவின் நலக் குழுவின் மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் அனுமதி கோரி  அன்றைய மாநில பொதுச் செயலா ளர் மாரிமுத்து கடிதம் அளித்திருந் தார். இவ்வாறு அனுமதி கேட்கப் பட்ட கடிதத்திற்கு அனுமதி அளிப் பதோ, மறுப்பதோ காவல்துறையின் செயல்முறை சார்ந்தது.

அராஜகச் செயல்

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக சென்னையிலிருந்து அமைப்பின் பணிகளை முடித்துவிட்டு காலை 8 மணிக்கு வீட்டிற்கு வந்த  மாரிமுத்துவை காவல்துறை உதவி  ஆய்வாளர் ராம் பிரபு , காலையில் குளித்து தயாராகவோ, உணவு உட்கொள்வதற்கோ அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக வயது மற்றும் அவரின் பொறுப்பின் தன்மையை பற்றி  பொருட்படுத்தாமல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பசியோடு 4 மணி நேரத்திற்கு மேலாக இருக்க வைத்துள்ளார்.  இந்த அராஜகச் செயலை கண்டித்து ப.மாரிமுத்து  தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரின் மீது விசாரணை நடைபெற்றது. காவல்துறை பொதுமக்கள் மற்றும் பொறுப்பில் இருப்பவர்கள்,முதியோர், பெண்கள்,குழந்தைகள், சிறு பான்மையினர், எளிய மக்களிடம் கனி வுடன் நடந்து கொள்ள வேண்டு மென்ற காவல்துறை சட்டம்- 2006, பிரிவு 58 க்கு மாறான வகையில் செயல்பட்டதை உறுதி செய்தது.  சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு கண்டனங்களை பதிவு செய்ததுடன், காவல்துறையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் தலை  வரான  ப. மாரிமுத்துவுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்க  வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது. இந்த தண்டனைத் தொகையை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ராம்பிரபுவிடமிருந்து  அரசு வசூலிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் இத்தீர்ப்பை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வரவேற்பதுடன்,பொதுவான இந்த பிரச்சனையில் சட்டத்திற்கு உட்பட்டு நின்று உரிமைகளுக்காக போராடிய தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாநில துணைத் தலைவர் ப.மாரிமுத்துவை வெகு வாக பாராட்டுகிறது. இவ்வழக்கை மூத்த வழக்கறிஞ ரும் தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநில கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.திருமலை ராஜன்,  மு. ஆனந்தன்,  (கோவை), என்.ஸ்டாலின், (சென்னை) ஆகிய மூவரும் முன்னின்று நடத்தி இந்த வெற்றியை உறுதி செய்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

 

;