states

விஜயபாஸ்கர் வீட்டிலும் அதிரடி சோதனை

புதுக்கோட்டை, செப்.13 - தனியார் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு முறை கேடாக சான்றிதழ் வழங்கிய குற்  றச்சாட்டின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்  பூரில் உள்ள முன்னாள் அமைச் சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில்  செவ்வாய்க்கிழமை லஞ்ச ஒழிப் புத்துறை போலீசார் 9 மணி நேர மாக அதிரடி சோதனை நடத்தி னர். புதுக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்தவர் முன்னாள் சுகா தாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர். தற்போது விராலி மலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதிமுக அமைச்சரவையில் 8  ஆண்டு காலமாக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள் ளார். இவர் அமைச்சராக இருந்த  காலக் கட்டத்தில் ஊழல், முறை கேடுகள் என பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டு வாடா மற்றும் குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்  படையில் வருமான வரித்துறை யினர், அமலாக்கத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமா னத்தைவிட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் என பல்  வேறு சொத்துகளை வாங்கியுள் ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது  வீடு உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்ட இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம்,  136 கனரக வாகனங்களின் சான்றுகள் 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலை யில், இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கொரோனா விற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகளில்  ஈடுபட்டார் என பல்வேறு குற்றச் சாட்டுகளும் எழுந்து வந்தன. 

அதன் தொடர்ச்சியாக திரு வள்ளூர் மாவட்டம் ஊத்துக்  கோட்டை தாலுகா மஞ்சக் கரனை கிராமத்தில் உள்ள வேல்ஸ் என்ற தனியார் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யுடன் கடந்த இரண்டு ஆண்டு களாக செயல்பட்டு வருவதாக வும், இந்த மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முறைகேடாக தகுதிச் சான்றி தழை 2020-ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வழங்கி உள்ளதாக கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்ப டையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழக முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்த மான 13 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சௌராஷ்  டிரா தெருவில் விஜயபாஸ்க ருக்கு சொந்தமான இரண்டு வீடு கள் உள்ளன. இந்த வீடுகளில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் டிஎஸ்பி மணிகண் டன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 9 மணி நேரம் அதிரடி யாக சோதனை செய்தனர். இந்த சோதனையை அடுத்து விஜய பாஸ்கரின் ஆதரவாளர்கள், விஜயபாஸ்கரின் இல்லம் முன்பு குவிந்தனர். இதனை யடுத்து 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த பகுதி யில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் இந்த  கல்லூரிக்கு மட்டுமே முறை கேடாக சான்று வழங்கினாரா? வேறு ஏதும் கல்லூரிகளுக்கு இது போன்று சான்றிதழ்களை முறைகேடாக வழங்கினாரா? என்பது குறித்து விசாரணை முடி வில் தெரியவரும்.

;