ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை!
ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14, 15 ஆகிய வெர்ஷன்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள், டாப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களை பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதில ளிப்பு குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வெர்ஷன்களின் Frame work, System, Google Play System updates, Kernel, kernel LTS, Imagination Technologies MediaTek, மற்றும் Qualcomm போன்ற கூறுகள் குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும், இந்த குறை பாடுகளை மூலம் ஹேக்கர்களால் ஆண்ட்ராய்டு சாதனத்தை ஹேக் செய்து தகவல்களை திருடவும், arbitrary code-களை இயக்கவும், சேவை மறுக்கப்படும் நிலையை (DoS) ஏற்படுத்தவும் முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மேலே சொல்லப் பட்டுள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன் களை பயன்படுத்துவோர் உடன டியாக தங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷனை அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் லைவ் லொகேஷனை பகிரும் அம்சம்!
வாட்ஸ்அப்பை போலவே இன்ஸ்டாகிராமிலும் லைவ் லொகேஷனை (Live Location) பகிரும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள், டைரக்ட் மெசேஜ் (Direct Message) மூலம் தங்கள் நண்பர்களுக்கு வைவ் லொகேஷன், பின் செய்யப்பட்ட லொகேஷன் (Pinned Location) அல்லது ஒரு லொகேஷனை search செய்து அதனை அனுப்பவும் முடியும். அதிகபட்சம் 60 நிமிடங்கள் வரை இந்த லைவ் லொகேஷன் ஆக்டிவாக இருக்கும். வைவ் லொகே ஷனை ஒரு நபருக்கோ அல்லது குரூப்களுக்கு பகிர முடியும். ஆனால் மற்றவர்கள் அதனை ஃபார்வேர்ட் செய்ய முடியாது. மேலும், லைவ் லொகேஷனை அனுப்பியவர் எப்போது வேண்டுமானால் “Stop sharing location” என்ற ஆப்ஷனை பயன்படுத்தி, லொகேஷன் பகிரப்படு வதை நிறுத்த முடியும். இதை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் டைரக்ட் மெசேஜ்களில் காண்பிக்கும் பயனர்களிடம் யூசர்னேமை (Username) மாற்றி வைக்கும் அம்சமும், 300 ஸ்டிக்கர்கள் கொண்ட 17 ஸ்டிக்கர் போக்குகளையும் மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம்!
வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்ட் மெசேஜ்களை (Forward Messages) கஸ்டமைஸ் செய்யும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக WABetaInfo அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் பீட்டா ஆண்ட்ராய்டு v2.24.25.3 வெர்ஷனில் வழங்கப்பட் டுள்ளதாக WABetaInfo அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஃபார்வேர்ட் மெசேஜ்களை கஸ்டமைஸ் செய்யும் அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு வந்த டெக்ஸ்ட் மெசேஜ் (Text Message), டாக்குமெண்ட்ஸ் (Docu ments), வீடியோ மற்றும் புகைப்படங்களை மற்ற வர்களுக்கு அனுப்பும் போது அதில் கூடுதலாக சில விவரங்களை சேர்த்து அனுப்ப முடியும் என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.