states

ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் நடப்புக்கு மாறான ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் அறிக்கை

புதுதில்லி, செப்.15- ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர், இந்தோனேசிய நாட்டின் பாலி நகரில் நடை பெற்ற ஜி.20 நாடுகளின் பொதுத் தொடர்பு பயிற்சிக் (Public Relation Exercise) கூட்டத்  தில், சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு முற்றிலும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு வெளியிட் டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர்  அங்கே பேசும்போது கோவிட் பெருந்தொற்  றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து தொழி லாளர்கள் மீண்டும் தொழிலாளர்களுக்கு மீண்  டும் வேலைவாய்ப்பு நிலைமைகளை வலுப் படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் அதே  சமயத்தில், இந்தியாவிலோ, ஒன்றிய அரசா னது கோவிட் தொற்றுக் காலத்தில் புதிதாக ‘தொகுப்புச் சட்டங்களை’ (‘labour codes‘)  உருவாக்கி, தொழிலாளர்கள் இதுநாள்வரை யிலும் பெற்றுவந்த உரிமைகளை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது.

இவர்கள் புதிதாகக் கொண்டுவந்துள்ள சமூகப் பாதுகாப்புத் தொகுப்புச் சட்டம் (social secureity code), இதுநாள்வரையிலும் பீடித்  தொழிலாளர்களுக்கும், சுரங்கத் தொழிலா ளர்களுக்கும் இருந்து வந்த சமூகப் பாது காப்புத் திட்டங்களை ஒழித்துக் கட்டி இருக்கி றது. நாட்டிலுள்ள தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் சமூகப் பாதுகாப்பு வலைப் பின்ன லுக்குள் கொண்டுவரப்படாததால் முதலாளி கள் மிகவும் பயன் அடைந்திருக்கிறார்கள். அமைச்சரின் அறிக்கை வேலைவாய்ப்பு பெருக்கம் குறித்தும், சமூகப் பாதுகாப்பை அதி கரிப்பது குறித்தும், திறன் வளர்ச்சியை மேம்  படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் வலு வான கொள்கைகள் வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளது. ஆனால் அவருடைய அர சாங்கமே அதற்கு நேரெதிராக நாட்டில் செயல்  பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, அமைச்சரின் இந்த அறிக்கை யானது பாசாங்குத்தனமான மக்கள் விரோத அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள ஓர் அறிக்கையே தவிர, அதில் உண்மை எது வும் இல்லை என்று சிஐடியு வலுவான முறை யில் தெரிவித்துக் கொள்கிறது.    (ந.நி.)

;