states

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கில் ஊடுருவல்

சென்னை, செப்.4 தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில்  எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப் போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” எனப் பதிவி்டப்பட்டிருந்தது. அதன்பின் 2ஆவது ட்வீட்டில் கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ 1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம். எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உரு வாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்ப் இண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.உதவிக்கான கிரிப்டோ முகவரிகள்” என்று பதிவிடப்பட்டிருந்தது. அதோடு Variorius (@V_Senthilbalaji)என்று கணக்கின்பெயரும் மாற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் அந்த ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அந்நிறுவனத்திடம் ஞாயிறு (செப்-4) காலை புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;