states

img

வாலிபர் சங்க மாநாட்டுக் கொடிப் பயணம் துவங்கியது

சிவகங்கை, செப். 9- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு  கள்ளக்குறிச்சியில் செப்டம்பர் 11 (நாளை) லட்சம் இளைஞர்களின் பேரணியுடன் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஏற்றப்பட வுள்ள வாலிபர் சங்கக் கொடியை சிவகங்கை மாவட்டம், பழையனூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.கருப்பு ராஜா எடுத்துக் கொடுத்து பயணத்தை   துவக்கிவைத்தார். கொடியை மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பெற்றுக்கொண்டார்.  திருப்புவனம் அருகே பழைய னூரில் நடைபெற்ற பயண துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஜேம்ஸ்ராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோபி,மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் இன்னாசி ராஜா, மாவட்ட துணை தலைவர் மாக்சிம் கார்க்கி, முனீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.