states

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது

மேட்டூர், ஜூன் 12- கர்நாடக மாநிலத்தில் காவிரி நீப்  பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால்  மேட்டூர் அணைக்கு வினா டிக்கு 5 ஆயிரத்து 753 கன அடியாக  வந்த நீர்வரத்து ஞாயிறன்று (ஜூன் 12)  4 ஆயிரத்து 190 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு  12,000 கனஅடி தண்ணீர் திறந்து  விடப்படுகிறது. நீர்வரத்தை காட்டிலும்,  நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணை யின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் 114.57 அடியாக  இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 114.10 அடியாக சரிந்தது.