சென்னை, செப். 11- மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அர்டசியல் கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி யுள்ள நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, வரும் 2027ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இது பொதுமக்க ளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மின் கட்டண உயர்வு தொடர்பாக, தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், மொத்தக் கடன் நிலு வைத் தொகை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருப்பதாகவும், மின்வாரியம் செலுத்த வேண்டிய வட்டியும் 259 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய நிபந்தனை தான், மின் கட்டணத் திருத்தம் என்றும், ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களும் ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய நிபந்தனை களை விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள் ளது.
ஆனால், தமிழ்நாடு மின்வாரியம், கட்ட ணத்தை திருத்தம் செய்யாமல் இருந்ததால், பல சட்ட அமைப்புகளிடம் இருந்து கண்டனங்கள் வந்ததாகவும், எனவே 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்ட ணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் 2 கோடியே 37 லட்சம் வீடுகள் மற்றும் குடிசை மின் நுகர்வோரில் ஒரு கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு ஏதும் இல்லை என்றும், அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. குடிசை, விவசா யம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழி பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடரும் என்றும், தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் உயர ழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலையான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது. இவை மட்டுமின்றி, மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொழில்முறை வேலைக்கு வீட்டில் 200 சதுர அடி வரை வீட்டு மின் உபயோகத்திலேயே பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி, வீட்டு மின் நுகர்வோருக்கு மாதம்தோறும் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை நிலைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.