தமிழ்நாடு அணிக்கு இன்று முதல் லீக் ஆட்டம் தில்லி அணியை எதிர்கொள்கிறது
புரோ கபடி லீக் தொடரில் அதிரடியாக விளையாடும் நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ்நாடு அணி (தமிழ் தலைவாஸ்) கடந்த சீசனில் (9-ஆவது) நட்சத்திர வீரர் பவன் செராவத்தை ஏலத்தில் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் காயம் காரணமாக பவன் செராவத் விளையாடாத நிலையில், நரேந்தர் மற்றும் அஜிங்கியா பவாரை வைத்து கடும் போராட்டத்துக்கு இடையே எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் உத்தரப்பிரதேசம் அணியிடம் போராடி வெளியேறியது தமிழ்நாடு அணி. இந்நிலையில் நடப்பு சீசனில் நரேந்தர், அஜிங்கியா பவார், ஹிமான்சு, ரித்திக் என 4 நட்சத்திர வீரர்கள் மற்றும் சூப்பர் பார்மில் உள்ள 6 வீரர்கள் என பெரும்படையுடன் களமிறங்கும் தமிழ்நாடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நவீன் தலைமையிலான தில்லி அணியை (தபாங் தில்லி) எதிர்கொள்கிறது. இரு அணிகளும் சரிசம பலத்தில் இருப்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டங்கள்
தமிழ்நாடு - தில்லி
(3-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
இரண்டு ஆட்டங்களும் டிரான்ஸ்ஸ்டேடியா மைதானம், அகமதாபாத், குஜராத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்) ஹாட் ஸ்டார் ஓடிடி - சந்தா தொகை இருந்தால் மட்டுமே
குஜராத் - கர்நாடகா
(4-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
ஆறுதல் வெற்றியை ருசிக்குமா ஆஸ்திரேலியா?
இன்று கடைசி டி-20 போட்டி
5 டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் முதல் 4 டி-20 போட்டி முடிவில் 1-3 என கணக்கில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. இந்நிலையில், இந்த தொட ரின் கடைசி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடை பெறுகிறது. கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக் கில் கோப்பையை கையிலேந்தும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும் பும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
நேரம் : இரவு 7 மணி
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினி பிளக்ஸ், ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
வரலாறு படைத்த வங்கதேசம்
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் கடந்த செவ்வா யன்று வங்கதேசத்தின் சைல்கெட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 7 ரன்கள் பின்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 338 ரன்கள் குவித்து, நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 332 ரன்கள் நிர்ணயித்தது. சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி வங்கதேச அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், டெஸ்ட் வரலாற்றில் நியூஸிலாந்து அணியை முதன்முதலாக வீழ்த்தி புதிய வரலாறு (சொந்தமாக) படைத்தது வங்கதேச அணி. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்திற்கு முன்னேறியது வங்கதேசம்.