states

மனைவியிடம் கட்டாய பாலுறவு குற்றமாகுமா?

புதுதில்லி, செப்.17- மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்ளும் விவகாரம் தொடர்பாக, ஒன்றிய அரசு பதில ளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப் பட்ட இந்திய தண்டனைச் சட்டம்  பிரிவு 375-ல், மனைவி 15 வயதுக்கு  உட்பட்டவராக இல்லாவிட்டால், கணவன், தனது மனைவியை கட்டா யப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா காது என்ற விதிவிலக்கு உள்ளது. இந்நிலையில், இந்த விதிவிலக்கு, கணவா்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் திருமணமான பெண்களுக்கு எதிராக இருப்ப தால், அந்த விதிவிலக்கை ரத்து  செய்ய வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புக்கள் மற்றும்  தனிநபர்கள், தில்லி உயர்நீதிமன் றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள், கடந்த மே 11  அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கள் சி. ஹரி ஷங்கர் மற்றும் ராஜீவ் ஷக்தர் ஆகியோர் அடங்கிய அமர்  வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “சட்டப் பிரிவு 375-ல்  இருக்கும் இந்த விதிவிலக்கு சட்ட விரோதமானது” என்றும், “ஆண் -  பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்  தும் சட்டப் பிரிவு 14-க்கு எதிரானது” என்றும் கூறி, அந்த விதிவிலக்கை நீதிபதி ராஜீவ் ஷக்தர் ரத்து செய்து உத்தரவிட்டார். அதேநேரம், மற்றொரு நீதிபதி யான ஹரி ஷங்கர், சட்டப்பிரிவு 375-ல் இருக்கும் விதிவிலக்கு சட்ட விரோதமானது அல்ல என தீர்ப்ப ளித்தார். சமத்துவம், பேச்சு சுதந்தி ரம், வாழ்க்கை சுதந்திரம் தொடர்  பான அரசியலமைப்பு உரிமை களை அது மீறவில்லை என்றும் தெரிவித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்  வாறு இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு சென்றது. வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதி கள் பி.வி. நாகர்த்தனா, அஜய்  ரஸ்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘திருமண பந்தத் தில் இருக்கும்போது கட்டாய பாலு றவு கொள்வது தொடர்பான விவ காரத்தில், ஒன்றிய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2023 பிப்ரவரிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

;