states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரியா? பாஜக-வின் ஏஜெண்டா?

போபால், செப். 11 - மத்தியப் பிரதேசத்தில் பன்னா மாவட்டம் குன்னூர் ஜன்பத் பஞ்சாயத்து துணைத்தலைவரைத் தேர்வு செய்வதற் கான தேர்தல் ஆகஸ்ட் 27 அன்று நடை பெற்றது.  இதில், காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பர்மானந்த் ஷர்மா 25 வாக்குகளில் 13 வாக்குகளை பெற்றார். பாஜக ஆதரவு வேட்பாளர் ராம் ஷிரோமணி மிஸ்ரா 12 வாக்குகளே பெற்று தோல்வியடைந்தார்.  ஆனால், பாஜக வேட்பாளர் ராம்  ஷிரோமணி மிஸ்ரா, பன்னா மாவட்ட ஆட்சி யர் சஞ்சய் மிஸ்ராவை நாடினார். ஆட்சி யரும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டதுடன், குலுக்கல் முறையில் ராம் ஷிரோமணி மிஸ்ரா வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதை எதிர்த்து, காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் பர்மானந்த் ஷர்மா மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் அகர்வால்,  “மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி, அதுவும் தேர்தல் அதிகாரியாக செயல்படும் வேளையில்- மறுபுறத்தில் ஒரு அரசியல் கட்சியின் (மறைமுகமாக பாஜக) ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார். இவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட தகுதியற்றவர். இதனால், அந்தப் பொறுப் பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இயற்கையான நீதி, கொள்கையைப் பின்பற்றாத ஆட்சியரை நீக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் கோத்ரா: தாக்கரே எச்சரிக்கை

ராமர் கோயில் திறப்பு விழா வுக்குப் பிறகு குஜராத்  தில் அரங்கேறிய  கோத்ரா கலவர சம்பவம் போன்று  மற்றொரு சம்பவம் அரங்கேறலாம் என சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்  கூறியதாவது: “மக்களவை தேர்த லுக்கு முன்னதாக 2024 ஜனவரியில்  உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் திறக்  கப்பட உள்ளது. ராமர் கோவில்  திறப்பு விழாவிற்கு பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஏராளமான மக்  களை ஒன்றிய பாஜக அரசாங்கம்  அழைக்கும் வாய்ப்பு உள்ளது. விழா முடிந்து மக்கள் திரும்பும் பய ணத்தில் கோத்ராவில் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவம். அதிகார  பேராசைக்காக சிலர் தங்கள்  சித்தாந்தத்தை மறந்துவிட்டனர்” என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 27, 2002 அன்று குஜ ராத்தின் கோத்ரா ரயில் நிலையத் தில் அயோத்தியிலிருந்து சபர்மதி  எக்ஸ்பிரஸில் திரும்பிய ‘கரசேவ கர்கள்’ ரயில் பெட்டிக்கு தீவைக்  கப்பட்டது. திட்டமிட்ட  இச்சம்ப வத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக கலவரத்தை தூண்டி இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்தது. முஸ்லிம் மக்களை குறிவைத்து அரங்கேற்றப்பட்ட இந்த இனக்கல வரத்தில் 2000-க்கும் அதிகமா னோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 மீட்டர் நிலத்தை இழந்த ஸ்ரீஹரிகோட்டா

இஸ்ரோவுக்கு சொந்தமான நாட்டின் பிரபல விண்வெளி ஏவுதளம் அமைத்துள்ள இடமான ஸ்ரீஹரிகோட்டா ஆந்தி ரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அரண் தீவு பகுதியில் உள்ளது. இங்குள்ள சதீஷ் தவான் விண்  வெளி மையம் மூலம் “சந்திரயான் - 3” ஆதித்யா- எல்1 ஆகிய விண்  கலங்கள் விண்ணில் ஏவப்பட்டது. உலக புகழ்மிக்க இந்த ஸ்ரீஹரி கோட்டா பகுதிக்கு பெரிய சிக்கல்  முளைத்துள்ளது. அது யாதெனில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கடல் அரிப்புக்கு ஸ்ரீஹரிகோட்டா  100 மீட்டர் நிலப்பகுதியை  இஸ்ரோ  இழந்துவிட்டது. புயல் பாதிப்பின் போது கடற்கரையோர இரண்டு  சாலைகள் அடித்துச்செல்லப்பட்டு விட்டன, மூன்றாவது சாலையும் சேதமடைந்துவிட்டது. இதனால் நில அரிப்பைத் தடுக்கும் கட்ட மைப்பை மேற்கொள்ள ஆந்திர மாநில கடற்கரை மண்டல மேலாண் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சென்னையைச் சேர்ந்த தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையத்  தின் உதவியையும் சதீஷ் தவான்   விண்வெளி மையம் கோரியுள்ளது. அதானியால் சிக்கல்? சென்னையில் பரிந்துரையில் உள்ள அதானி-காட்டுப்பள்ளி துறை முக விரிவாக்கத்தால் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு நில அரிப்பு அபாயம்  ஏற்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளனர்.

பட்டாசுக்கு தடை

“பட்டாசுகளுக்குத் தடை விதிக்கும் நடைமுறையை தில்லி அரசு கடந்த 3 ஆண்டுகளாகக் கடைப்  பிடித்து வருகிறது. கடைசி 6 ஆண்டு களில் தில்லியின் காற்றின் தரம் கணிச மான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. எனவே, இதை இன்னும் மேம்படுத்த முயற்சித்து இந்தாண்டும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க முடிவு செய்  துள்ளோம். முக்கியமாக காவல்துறைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று சுற்றுச்சூழலை காப்பதும் முக்கியம்” என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.

உச்சத்தில் பங்குச்சந்தை நிப்டி

வாரத்தின் முதல் வணிக நாளான திங்க ளன்று பங்குச்சந்தை குறியீட்டு எண்  சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்வுடன்  முடிவடைந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்  நிப்டி இதுவரை இல்லாத அளவுக்கு 20,000 புள்ளிகள்  வரை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு  எண் 528.17 புள்ளிகள் உயர்ந்து  67,127.08 புள்ளிகளாக வும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  176.40  புள்ளிகள் உயர்ந்து 19,996 புள்ளிகளாக நிறைவு  பெற்றது. முக்கியமாக இந்திய வணிகத்தில் மாலை  3.30 மணியளவில் நிப்டி புள்ளிகள் 185 புள்ளிகள் உயர்ந்து 20,005.40 என்ற உச்சத்தை எட்டியது. அதே  நேரத்தில் சென்சென்ஸ் 557 புள்ளிகள் உயர்ந்து 67,156ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


வேன் மீது லாரி மோதி விபத்து:  7 பேர் பலி

திருப்பத்தூர், செப். 11- திருபத்தூர்  மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதிய  விபத்தில் ஏழு பேர் உயிரி ழந்துள்ள சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும்  7 பேர் உயிருக்கு ஆபத்தான  நிலையில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டைச் சேர்ந்த சிலர் இரண்டு வேன்களில் சுற்றுலா சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே சென்று கொண்டி ருக்கும் போது ஒரு வேன் பழுதடைந்துள்ளது. அதை சாலையோரம் நிறுத்தி விட்டு பழுது நீக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்த வேனில் பின்புறத்தில் பயங் கரமாக மோதியது. இதில்  வேனில் பின்பகுதி மோச மாக நொறுகியது. இந்த விபத்தில், 7 பேர் அந்த இடத் திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவ லறிந்து அங்கு வந்த  திருப்பத்தூர் காவல்துறை யினர், விபத்தில் பலத்த காயம் அடைந்த 7 பேரை  மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். சம்பவ இடத்தில் உயிரி ழந்த  7 பேரின் உடல்களை யும் கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வரு கின்றனர்.

  கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்!

ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் பேட்டி

சேலம், செப். 11-  கடந்த 2017-ம் ஆண்டு கொட நாடு எஸ்டேட்டில் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர் பாக சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் கனக ராஜ் உள்பட பலர் மீது காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த சம்பவம் நடந்த சில மாதங்க ளில் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரி ழந்தார். இதற்கிடையில் கனகராஜ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய அண்ணன் தனபால் புகார் கூறி வருகிறார்.  அவர் திங்களன்று (செப்.11)  சேலத்தில் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- கொடநாடு கொலை  வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் குறித்த விபரங்களை தான் வெளி யிட்டதால் தான் மனநலம் பாதிக்கப் பட்டதாக காவல்துறை கண்காணிப் பாளரிடம்  என் மீது புகார் அளித்துள்ள னர். மேலும் அதில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். தான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. இது  பற்றி மருத்துவரும் குறிப்பிட வில்லை. அதற்கான ஆதாரங்களை தர தயாரா?.  சிபிசிஐடி விசாரணைக்கு தடையாக இருக்கும் என்பதால் இது போன்ற நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். நான் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நல்ல மனநிலையோடு எனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன். தேவைப்பட்டால் சிபிசிஐடி போலீசார் என்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு  உட்படுத்தினாலும் அதற்கு சம்மதிப் பேன். சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க தன்னிடம்  பேரம் பேசப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடி வரை தருவதாக அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு வந்து பேசினார்.   இவ்வாறு அவர் கூறினார்.