states

சமூக வலைத்தளங்களில் தனிநபரின் பதிவுகளை நீக்க உயர்நீதிமன்றம் - ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்

மதுரை, அக்.14-  சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் தனி நபரின் பதிவுகளை  நீக்க உயர்நீதிமன்றம்  மற்றும்  ஒன்றிய  அரசு உத்தரவிட வேண்டும். அவர்களின் உத்தரவு இல்லாமல்  நீக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் கூறினர்.  நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவதூறாக பேசியதாக நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கர்  6 மாத தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் சவுக்கு  சங்கர் பேசிய வீடியோக்களை டிவிட்டர், பேஸ்புக், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத் திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தி ருந்தது. அந்த உத்தரவை  நிறைவேற்றியது   சம்பந்தமாக வெள்ளியன்று  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும்  ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இது குறித்த விசாரணை  நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. விசாரணையின் போது யூ டியூப், பேஸ்புக், டிவிட்டர் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி, தனிப்பட்ட ஒரு பதிவை நீக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் குறிப்பிட்ட பதிவை நீக்கக் கோரி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் அல்லது ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை தவிர்த்து நாங்களாக நீக்க முடியாது என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் கூறுகையில், சமூகத்தில் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முறை யான கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்கள் எந்தவித கட்டுப்பா டுகளும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.  இதனால் தனிமனித உரிமை பாதிக்கப்படு வது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சனை யும் ஏற்படுகிறது. இதை வரைமுறைப் படுத்த வேண்டும் என்று கோரிக்கைவைத்தார். வீடியோ பதிவு செய்பவர்கள் யார்,  அதற்கு கமெண்ட்  செய்பவர்கள்  யார், அவர்களை  கண்டுபிடிக்க முடியுமா நடவ டிக்கை எடுக்க முடியுமா என்று  சமூக வலைத்தள வழக்கறிஞர்களிடம் நீதிபதி கள் கேள்வி எழுப்பினர் . வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு முன்பாக என்ன விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர்.