states

சென்னையில் ரூ.442 கோடியில் 796 சாலைகள் சீரமைப்பு

சென்னை, ஜூலை 11- சென்னையில் ரூ.442 கோடியில் 796 கி.மீ சாலைகள் விரைவில் சீரமைக் கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சி யால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக் கப்பட்டு வருகின்றன.  பருவமழையின் போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு சீரமைக்கப்பட்டது. தற்போது நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் சாலைப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சென்னையில் ரூ.442 கோடியில் 796 கி.மீ சாலைகள் விரை வில் சீரமைக்கப்படவுள்ளது. நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 749 கி.மீ நீளத்துக்கு 4710 சாலைகள், ரூ.397 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இதைத் தவிர்த்து 40 பேருந்து தட சாலைகள், 20 கி.மீ நீளத்துக்கு ரூ.44 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. முன்னதாக, சென்னை மாநகராட்சி யில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்  கீழ், ரூ.55.61 கோடியில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி யில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடியில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடியில் 204.82 கிலோ மீட்டர் நீளத் தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்  புறச் சாலைகள் உட்பட 1,157 சாலை கள் அமைக்கும் பணிகள் நடந்து வரு கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.