சென்னை, ஜூலை 5- சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1 வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்படும் பிரச்சனை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2 ஆம் தேதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டில் இருந்த செவிலியர் அலட்சி யமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் உத்தரவிட்டார். அதன்படி, விசாரணை குழு தனது விசாரணை நடத்தியது. குழந்தையின் தாய் அஜிஷாவிடம் நடத்திய விசாரணை யில் 3 பக்கங்களில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகள் அனைத் திற்கும் அஜிஷா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இந்த நிலையில், விசாரணை குழு வின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது. குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophleb itis என்று கணித்து சிகிச்சை அளித் துள்ளார். ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள் ளது. உயிரை காப்பாற்றும் முயற்சி யில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.