states

ரூ.3,50,000 டெபாசிட் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜூலை 7- கோயில்கள் தொடர்பான 7  பொதுநல வழக்குகள் தொடர்ந் துள்ள ரங்கராஜன் நரசிம்மன் என்ப வரது நேர்மைத் தன்மையை நிரூ பிக்கும் வகையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வைப்புத் தொகையை செலுத்தும்படி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்கு களை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க  கூடாது என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து அவர் இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளார். இந்த 7 வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயில் பக்தர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோயில்களின் பக்தர் தான் என்று பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், மனு தாரர் தனது நேர்மைத் தன்மை நிரூ பிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு  தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் என 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் வைப்பு தொகை யாக செலுத்த வேண்டும் என உத்தர விட்டனர். மனுதாரர் தாக்கல் செய்துள்ள வழக்கில் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை அவருக்கு திரும்ப அளிக் கப்படும். இல்லையென்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ரூ.3 லட்சத்து 50  ஆயிரம் வைப்புத் தொகையை செலுத்திய பிறகு அவரது வழக்கை விசாரணைக்கு பட்டி யலிட உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

;