எடப்பாடி கோரிக்கை நிராகரிப்பு!
புதுதில்லி, நவ. 28 - அதிமுக பொதுக்குழு தொடரப்பட்டிருந்த தனது வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், விசாரணையை தள்ளி வைக்கும் ஓபிஎஸ்-சின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என எடப்பாடி தரப்பில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று வழக்கை விசாரித்த சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி அமர்வு எடப்பாடி கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
மகளிர் உரிமைத் தொகைக்கு எதிரான மனு தள்ளுபடி!
புதுதில்லி, நவ.28- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்குவதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந் தார். இந்த மனு செவ்வா யன்று உச்சநீதிமன்ற நீதி பதி பி.ஆர். கவாய் தலைமை யிலான அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தெலுங்கானாவில் பிரச்சாரம் ஓய்ந்தது
ஹைதராபாத், நவ. 28- 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநி லத்தில் நவம்பர் 30 அன்று (வியாழன்) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், செவ்வாயன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இறுதி நாளில் சிபிஐ(எம்), பிஆர் எஸ், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிர பிர ச்சாரம் மேற்கொண்டனர்.
பீகாரில் 65 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு
பாட்னா, நவ. 28 - பீகாரில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில், ஓபிசி, எஸ்சி, எஸ்.டி. ஆகியோருக்கான இடஒதுக் கீட்டை 50 சதவிகிதத்தி லிருந்து 65 சதவிகிதமாக உயா்த்தும் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாட்னா உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு கார் பார்க்கிங் சர்வேக்கு உத்தரவு
புதுதில்லி, நவ. 28 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்பரப்புப் பகுதி யில் மெகா கார் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த கேரளாவுக்கு அனுமதி அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை செவ்வா யன்று விசாரித்த நீதிபதி, ஏ.எஸ். ஓகா, 1886-ஆம் ஆண்டு செய்துகொள்ளப் பட்ட ஒப்பந்தத்தின்படி லீசுக்கு வழங்கிய இடத்தில் பார்க்கிங் அமைகிறதா, என சர்வே நடத்த, சர்வே ஆப் இந்தியாவுக்கு மூன்று மாதங் கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
புதுதில்லி, நவ. 28 - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மருத்துவக் காரணம் அடிப்படையில் ஜாமீன் வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துள்ளது. செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையைப் பார்க்கும்போது, ஜாமீன் வழங்கும் அளவுக்கு அவ ருக்கு உடல்நிலையில் மிக வும் தீவிரமான பாதிப்பு, உயி ருக்கு ஆபத்து இருப்பதாக தெரியவில்லை என்றும், அதேநேரம் வழக்கமான முறையை பின்பற்றி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி விசாரணை நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, எஸ்.சி. சர்மா அமர்வு தெரிவித்துள்ளது.
கேரள ஆளுநர் பணிந்தார்
திருவனந்தபுரம், நவ. 28 - கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்கா மல் நிலுவையில் வைத்திரு ந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், செவ்வாயன்று திடீ ரென 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். சட்டமன்றத்தை மதிக் காத ஆளுநரின் செயல்பா ட்டுக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பல்வேறு கண்டனங்களை தெரிவித்திருந்தது. விரை வில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவும் உள்ளது. இந்நி லையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் 8 மசோதா க்களுக்கு ஒப்புதல் அளித்து ள்ளார். பல்கலைக்கழக திருத்த மசோதா உட்பட 7 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
தொழில்முறை ரவுடிகளை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை
முகம்மது சாலிவு மீதான கொலைவெறித் தாக்குத லுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தொழில்முறை ரவுடிகளின் அரா ஜகம் குறித்து, ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்கெனவே புகார் ஒன்றை அளித்திருந்தது, அந்த புகார் அடிப்படையில் தொழில்முறை ரவுடி யான ஸ்ரீராம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. துணிகரமாக ஆயுதங்கள் கையில் எடுத்துக் கொண்டு பொதுமக்களிடம் தகராறு செய்வது, மிரட்டுவது போன்ற பல்வேறு அடாவடித்தனங்களை ஸ்ரீராம் தலைமையில் ஒரு கூட்டம் அங்கே செய்து வருகிறது. ஏற்கெனவே இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்ற போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய சாலை மறியலை யொட்டி, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு வார காலத்திற்குள் தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்வ தாக காவல்துறையினர் கூறினர். ஆனால் கடைசி வரையும் கைது செய்யவில்லை. ஆவுடையார்கோவில் காவல்துறை தொழில்முறை ரவுடி களை கட்டுப்படுத்த முடியாமல்திணறுகிறது. இதன்தொடர்ச்சியாக செவ்வா யன்று நடந்துள்ள இந்த சம்பவம் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களுக்காக போராடும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி மீதே கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதில் தொடர்புடைய தொழில்முறை ரவுடிகள் அனைவரையும் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட வேண்டுகிறோம். ஆவுடையார்கோவிலில் பட்டப் பக லில் ஒரு போராட்ட தயாரிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இப்படி தாக்கு வதற்கு துணிச்சல் வருகிறது என்று சொன்னால் காவல்துறை மீது அச்சம் இல்லாமல் ரவுடிகள் வலம் வரு கிறார்கள் என்றுதான் அர்த்தம். இது போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்யவேண்டுகிறோம். இவ்வாறான அனைத்து பிரச்சனை களில் ஈடுபடும் ரவுடிகள் பெரும்பாலும் போதைப்பொருள் விற்பனை சார்ந்தும் இயங்கி வருகின்றனர் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். இவ்வாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.