states

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

சென்னை, ஜூன் 27- தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திங்களன்று (ஜூன் 27) வெளியானது. பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது.12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடை பெற்ற நிலையில், பதினோராம் மாண வர்களுக்கு மே 9 முதல் மே 31 வரை நடை பெற்றது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத் தில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத் தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

10 மற்றும் 12ஆவம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியான நிலையில், பதினோராம் வகுப்பு தேர்வு முடிவு பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் மொத்தம் 8.3 லட்சம்  மாணவர்கள் தேர்வுக்குப் பதிவு செய்து  இருந்த நிலையில், அவர்களில் 41,376  பேர் தேர்வு எழுதவில்லை என்று தேர்வு  எழுதவில்லை என்று தெரிவித்திருக் கிறார். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.07  விழுக்காடாகும். வழக்கம் போல மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99 விழுக்காடாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 84.6  விழுக்காடு பெற்றுள்ளதாக குறிப்பிட் டுள்ளார். 95.56 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருக் கும் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் 95.44 விழுக்காடு தேர்ச்சி யுடன் 2ஆம் இடத்திலும், மதுரை  மாவட்டம் 95.25 விழுக்காடு டன் மூன்றாம்  இடத்தையும் பிடித்துள்ளது. 80.02 விழுக்காடு தேர்ச்சியை பதிவு  செய்திருக்கும் வேலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி இடத்தை பிடித் திருக்கிறது என்றும் தெரிவித்திருக் கிறார். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒரு  மாணவர் தேர்வு எழுதினார். அவரும்  தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவர்க ளுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டது என்றும் தெரி விக்கிறார்.