states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கொலுசுக்காக  100 வயது மூதாட்டியின் காலை வெட்டி எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்

ஜெய்ப்பூர், அக்.9- இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 100 வயது மூதாட்டி அணிந்திருந்த கொலுசுகளை கொள்ளையடிப்பதற்காக அவரது காலையே வெட்டியெடுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து  பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கங்கா தேவி கூறுகையில், “மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடு வதற்காக, மூதாட்டியின் காலை, ஒரு கும்  பல் அறுத்துச் சென்றது. ஞாயிறு காலை  ஆறு மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து எனது மருமகள் என்னி டம் தெரிவித்தார். எனது தாயார் ஆபத்தான  நிலையில் வீட்டிற்கு வெளியே கிடப்பதாக  அவர் கூறினார். மூதாட்டியின் கழுத்தில் காயங்கள் இருந்தன மற்றும் அவரது கால் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது என்றார்.

மிஜோரம் சட்டமன்றத் தேர்தல்: பாஜக  தனித்துப் போட்டி

அய்ஸ்வால், (மிஜோரம்), அக்.9- வடகிழக்கு மாநிலமான மிஜோரம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தொடங்கியுள்  ளது. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி யிடுவோம் என மிசோரம் பாஜக மாநிலத் தலைவர் வன்லால்முகா ஐஸ்வாலில் தெரிவித்தார்.  மிசோரம் மாநிலத்தில் தற்போது மிஜோ  தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆட்சி  நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்ப ரில், மிஜோ தேசிய முன்னணியைச் சேர்ந்த  16 தலைவர்களை பாஜக தனது பக்கம் இழுத்  துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி தன்னைத் தானே  அழித்துக்கொள்வார்: மைத்ரேயன்

சென்னை,அக்.9-  ‘எடப்பாடி பழனிசாமி தன்னைத் தானேஅழித்துக்கொள்வார்’ என ஓ.பன்னீர்செல்வம் அணியில் மீண்டும் இணைந்த மைத்ரேயன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் இரு அணிகளாகப் பிரிந்த போது, முதலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் தலை மையிலான அதிமுகவில் இணையும் விழாவில், மீண்டும் மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்துள் ளார். தொடர்ந்து விழாவில் பேசிய மைத்ரேயன், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம் தான். அதிமுகவை ஒருங்கிணைத்து செல்லும் திறமை ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அழித்துவிட்டு, கடைசியில் தன்னைத் தானே அழித்துக் கொள்வார். எனக் கூறினார்.  மைத்ரேயன் நீக்கம் இதற்கிடையே எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில்,“கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்க மும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மைத்ரேயன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை, அக்.9- தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் நடந்தது.  தேர்வு முடிந்து 1ஆம் தேதி முதல் விடு முறை விடப்பட்டது. 9 நாட்கள் விடு முறைக்கு பிறகு திங்களன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திங்கட்கிழமை (அக்.10) திறக்கப்படுகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம்  வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு திங்களன்று வகுப்புகள் தொடங்கும். தொடக்கப் பள்ளி களான 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 13 ஆம் தேதி (வியாழன்) திறக்கப்படுகிறது.

மத்திய கல்வி நிறுவனங்களில்  இந்தியை திணிக்க பாமக எதிர்ப்பு

சென்னை,அக்.9- மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி தான் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; தேர்வுகளில் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் எனபன போன்றவை தேவை யற்றவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில்,  பல மொழிகள் பேசும்  நாட்டில் பயிற்று மொழிகளும், தேர்வு மொழிகளும் பரவலா க்கப்பட வேண்டுமே தவிர, குறுக்கப்படக் கூடாது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை இந்தியாவை முன்னேற்றுவதற்கு பதிலாக பின்னோக்கி இழுத்துச் சென்று விடும். ஆத லால், இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஒரு போதும் ஏற்கக் கூடாது. இந்தி பேசாத தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கும் முயற்சி நாடு விடுதலை அடைந்த காலத்தி லிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு பதில ளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 1959- ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அப்போதைய பிரதமர் நேரு, “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும்” என உறுதியளித்தார்.   1968-ஆம் ஆண்டின் இந்திய அலுவல் மொழிகள் சட்டத் திருத்தத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1976-ஆம்  ஆண்டின் அலுவல் மொழி விதி 11(2)-ன்படி யும் மத்திய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தை யும் மதிக்காமல் மத்திய அரசு கல்வி நிறுவ னங்களில் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக மாற்ற முயல்வது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அளித்த வாக்குறுதியையும், அலுவல் மொழிச் சட்ட விதிகளையும் அப்பட்டமாக மீறும் செயல் ஆகும். எனவே இந்தி யாவின் பன்முகத் தன்மைக்கு எந்த வகை யிலும் பாதிப்பு நேர மத்திய அரசு அனுமதிக் கக்கூடாது என்று அன்புமணி கூறியுள்ளார்.