states

அக்டோபர் 2 மனிதச் சங்கிலி திராவிடர் கழகம் பங்கேற்பு

ஈரோடு, செப். 28- சமூக நல்லிணக்க மனித சங்கிலி குறித்த  ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் புதனன்று நடைபெற்றது. வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத  நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காக்கும் முயற்சி யின் நடவடிக்கையாக மகாத்மா காந்தியின்  பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி யன்று தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க  மனிதச் சங்கிலி நடத்த சிபிஎம், சிபிஐ, விசிக சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக ஈரோட்டில் சமூக  நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவது குறித்த  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி. பிரபாகரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, சி.பரமசிவம், சி.முருகேசன், விசிக நிர்வாகிகள் அக்பர் அலி, விஜய பாலன், திருமா குணவளவன், அரங்க முதல்வன் மற்றும் சிபிஐ சி.எம்.துளசிமணி,  சின்னுசாமி, என்.ரமணி, ஜி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அக்டோபர் 2 அன்று ஈரோடு மாநகராட்சி அலுவலக வாளகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணி விப்பது. மாலை 4 மணிக்கு காந்திஜி சாலை யில் மனித சங்கிலி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் அனைத்துத் தரப்பு,  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங் கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோபியில் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.