மதுரை, செப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை மக்கள் மற்றும் இளைஞர் களின் நீண்டநாள் கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டுமென்பது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளைச் சேரந்த இளைஞர்கள் என்னை பல முறை சந்தித்து கோரிக்கை வைத்துள் ளனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டோம். ஜனவரி மாதம் 19 ஆம் தேதியன்று சென்னையில் தமி ழக முதல்வரை சந்தித்து மதுரைக்கு புதிய தொழில்நுட்ப பூங்கா, தொழில் பேட்டை, வேலைவாய்ப்பு, உள்கட்ட மைப்பு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுபாடு மற்றும் பசுமையான மதுரையை உருவாக்கும் பல திட்டங்கள் அடங்கிய கோரிக்கை களை நானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் முன்வைத்தோம். முதல்வர் அவர் களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கையளித்து அனுப்பினார். ஒரு மாதத்திற்கு முன்பு இக்கோரிக் கைகள் தொடர்பாக தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர்களை நானும் எங்கள் இயக்கத்தின் மாநி லத்தலைவர்களில் ஒருவரான எஸ். கண்ணன் அவர்களும் மீண்டும் சந்தித்து வலியுறுத்தினோம்.
மதுரையில் நடைபெற்ற “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்கிற தெற்கு மண்டல மாநாட்டில் பேருரையாற்றிய தமிழக முதல்வர் வர லாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார். “மதுரையில் புதிய டைடல் பார்க் துவக்கப்படும். முதற்கட்டமாக 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாட்டுத் தாவணி அருகே 10 ஏக்கரில் அது அமைக்கப்படும். அதன்மூலம் 10 ஆயி ரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று அறிவித்தார்.
இவ்வறிப்பு மதுரை மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப் பாடாகத்தான் மதுரை மக்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்தேன். மதுரையின் தொழில் வளர்ச்சிக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற மதுரையின் வளர்ச்சி மற்றும் முன்னேற் றம் (MID - Madurai Infrastructure & Development) என்கிற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மணிகண்டன், ரமேஷ்குமார், விக்னேஷ் குமார், ஹரி, விக்னேஷ், அரவிந்த், விஜய், காளிஸ், அர்விந்த் ஆகியோர் எமது அலுவலகத்தில் என்னை சந்தித்து இனிப்பு வழங்கி தங்களின் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். மதுரையின் நீண்ட நாள் கனவுத் திட்டமான இது அறிவிக்கப்பட்டதில் அனைவரின் முன்முயற்சியும் முக்கிய மானது. குறிப்பாக நகரின் வளர்ச்சிக் காக தொடர்ந்து சிந்தித்தும், செயல் பட்டுக்கொண்டும் இருக்கிற இது போன்ற இளைஞர்களின் தன்னார்வ மான முன்முயற்சிகள் மிகவும் பாராட் டப்பட வேண்டியது. அவர்கள் அனை வருக்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.