states

ஒரே ஆண்டில் 28 பேரின் உயிரைப் பறித்த நீட் பயிற்சி மையங்கள்!

ஜெய்ப்பூர், நவ. 28 - ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகிக் கொண்டி ருந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட மாணவர் களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் செயல்படும் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள், நாடு தழுவிய அளவில் பிரபலமானவை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், இங்கு தங்கி பயிற்சி பெறுகின்றனர்.   இந்த நீட் பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் செலவழித்து பிள்ளைகளை சேர்த்து விட்டாலே போதும் மருத்துவப் படிப்பு கனவு நனவாகிவிடும் என நம்புகின்றனர் பெற்றோர். ஆனால் கோட்டா பயிற்சி மையங்களின் அதீத கட்டுப்பாடுகள், நீட் தேர்வுக்கான நெருக் கடிகள் மாணவர்களின் உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி வருகின்றன. மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாண வர்கள் தற்கொலை செய்து கொள்வது இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையிலேயே, கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டி ருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த  பக்ருதீன் ஹூசைன் (20) என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோட்டா நகரின் வக்ப் நகரில் உள்ள பயிற்சி மையத்தில் பக்ருதீன் ஹூசைன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது கோட்டா நகரில் இந்த ஆண்டில் மட்டும் நிகழ்ந்த 28-ஆவது தற்கொலை யாகும்.