states

img

நாகை - இலங்கை கப்பல் சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம், அக்.8- நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக். 10-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாகப்பட்டினம் துறைமுகத்தி லிருந்து ஞாயிறு காலை தொடங்கியது.  பயணிகள் இல்லாமல் கப்பலை இயக்கும் கேப்டன் பிஜு பி. ஜார்ச் தலைமையில் 14 ஊழியர்கள் சோதனை ஓட்டத்தில் கப்பலில் பயணம் செய்தனர். மூன்று மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறையைச் சென்றடையும் கப்பல், மீண்டும் ஞாயிறு மாலை நாகப்பட்டினம் துறைமுகம் வந்துசேர்ந்தது.