சென்னை, ஜூன் 5- தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன் தெரிவித்தார் சென்னையில் செய்தியாளர்களை சந்தி த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,‘ தமிழ கத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள் ளது. ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை மையத்துக்கு தமிழகத்தில் இருந்து 150 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன தற்போது அதன் முடிவுகள் வெளிவந்தன. அதில் 12 பேருக்கு புதிய வகை தொற்று இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. குறிப்பாக, பிஏ 4 என்ற புதிய வகை தொற்று 4 பேருக்கும், பிஏ 5 என்ற புதிய வகை தொற்று 8 பேருக்கும் உறுதி யாகியுள்ளது. 12 பேரும் சென்னையை சுற்றி உள்ளவர்கள். அனைவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். தொடர்பில் இறந்த வர்களையும் பரிசோதனை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.