states

img

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக விஷம் கக்குவதா?

சென்னையில், இசை யமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி யில் ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில், ஏற்பாட்டா ளர்களின் நிர்வாகத் தவறால் கடும் அவதி ஏற் பட்டுள்ளது. இதுபற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோல நடக்கா மல், இசை நிகழ்வுகளை மக்கள் கொண்டாடும் விதத்தில் அரசு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஆனால், இதுதான் வாய்ப்பு  என்று பார்த்து, ஏ.ஆர்.ரகுமானின் மதத்தை குறிப்பிட்டு வன்மமான வெறுப்புக் கருத்தை பேசி யுள்ளார் பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.  பாஜகவினரின் இந்த அநாகரீகமான செயல் ஏற்க முடியாதது. தமிழ் நாட்டு மக்களும், இசை  ரசிகர்களும் உங்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

- ஜி.ராமகிருஷ்ணன், 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)