சென்னை, நவ. 8 - கிராமப்புற வேலை உறுதித் திட்டத் தில், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 4 மாத கூலி பாக்கி யை முழுமையாகத் தராமல், 4 வார கால த்திற்கான கூலியை மட்டும் விடு வித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வேலை செய்த 90 லட்சம் தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாத மாக ஒன்றிய பாஜக அரசு ஊதியம் வழங்க வில்லை. மேலும் நூறுநாள் வேலைத் திட்டத்தை முடக்கும் நோக்கத்துட னேயே மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை திட்டத்தின் நிதியை குறைத்ததோடு வேலையையும் கூலியையும் குறைத்துவந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.3000 கோடிக்கு மேல் ஊதியம் பாக்கி இருக்கும் நிலையில் அதனை தருவதற்கான எந்த நடவடிக்கை யும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. உடனடியாக 4 மாத ஊதிய பாக்கியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர வேண்டும் என்று, அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கடி தம் எழுதினார். எனினும், ஊதிய பாக்கி யை வழங்கிட ஒன்றிய அரசின் கவனத் திற்கு தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை. இந்நிலையில், தமிழ்நாடு முழு வதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம், மறி யல், முற்றுகை என தொடர் போராட்டத் தில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்ட னர். தீபாவளி பண்டிகை நெருங்கிய நேரத்தில் கூட ஊதியம் கொடுக்கப் படாத சூழலில் நவம்பர் 6 அன்று தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட மையங் களில் ஒன்றிய அரசின் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டத்தின் பின்னணி யில், 4 வாரங்களுக்கான கூலியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. தர வேண்டிய கூலி பாக்கி 4 மாதம்; கொடுத்ததோ 4 வாரம்! கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாயை ஒரே நாளில் அள்ளித் தரும் மோடி அரசு, தொழிலாளர்களின் கூலி பணத்தை பண்டிகை காலத்தில் கூட முழுமையாக வழங்காமல் இழுத்தடிப்பு செய்வது நியாயமல்ல என்று விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலை வர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் கூறியுள்ளனர். ஏழை கூலித் தொழி லாளர்களின் ரூ.3000 கோடியை தராமல் இருப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது; இது, கிராமப்புறங் களின் பொருளாதாரத்தையும் நலி வடைய செய்கிறது. ஆகவே ஒன்றிய அரசு உடனடியாக முழுமையாக கூலி பாக்கியை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.