54 வயது நபருக்கு 109 ஆண்டு சிறை
ஆகஸ்ட் 2022 முதல் ஜனவரி 2023 வரையிலான காலகட்டத்தில், மஞ்சேரியில் உள்ள தனது கடைக்கு சிறுமியை வரவழைத்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார் 54 வயது நபர் ஒருவர். இரண்டு மனைவிகளைக் கொண்ட இவர் ஒரே தவறை பலமுறை செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள் ளது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளி ஆசிரியையிடம் சிறுமி தனது தோழி மூலம் கூறியுள்ளார். ஆசிரியர் தெரிவித்ததை யடுத்து வழக்குப் பதிவு செய்ய மாஞ்சேரி போலீ சாருக்கு, சைல்டு லைன் உத்தரவிட்டது. மஞ்சேரி காவல் ஆய்வாளர் ரியாஸ் சாகேரி பிப்ரவரி 11, 2023 அன்று குற்றம் சாட்டப்பட்ட வரைக் கைது செய்து விசாரணைக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை மஞ்சேரி இரண்டாவது விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ரஷ்மி விசாரித்தார். அரீக்கோடு வள்ளிலாபுழா பகுதி யைச் சேர்ந்தவருக்கு தண்டனை விதித்தார். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தவறாக பயன்படுத்தல் , உறவினர்களால் வல்லுறவு செய்தல் மற்றும் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவு செய்தல் ஆகிய குற்றங்களுக்கு தலா 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராத மும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால், ஒவ் வொரு பிரிவிலும் நான்கு மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். உடல் ரீதியான வன்முறைக்கு மூன்று பிரிவு களின் கீழ் தண்டனை உண்டு. இந்த மூன்று பிரிவுகளிலும் தலா 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.5000 அப ராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறி னால், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். குழந்தை யை மிரட்டியதற்கு ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை. குற்றம் சாட்டப்பட்டவர் அப ராதத்தை செலுத்தினால், பாதிக்கப்பட்டவரி டம் அந்த தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதி மன்றத்தில் 16 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 18 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குற்ற வாளி தவனூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
100 மணிநேரத்தை கடந்த “அனந்த்நாக் ஆபரேசன்”
ஜம்மு - காஷ்மீர் பகுதியின் அதிக வனப்பகுதியை கொண்ட மாவட்டமான அனந்த்நாக்கின் கோகேர்னாக் பகுதியில் கடந்த புதனன்று பயங்கரவாதிகள் பதுங்கி யிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படை யினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். வியாழனன்று பயங்கர வாதிகள் இருப்பிடத்தை நெருங்கிய பொழுது, திடீரென பாது காப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப் பிரிவு கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்ப்ரீத் சிங், அதே பிரிவு கமாண்டர் மேஜர் ஆஷிஷ், காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி ஹுமாயுன் பட் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் என 4 பேர் உயி ரிழந்தனர். இவர்களுடன் 6 வயது பெண் லாப்ரடோர் மோப்ப நாயும் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான நிலையில், 3 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வெள்ளியன்று இரவு பயங்கர வாதிகள் இருப்பிடத்தை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படை யினர் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். மேலும் சில பயங்கரவாதிகள் கோகேர்னாக் பகுதியில் ஊடுருவியுள்ள தாக வெளியான தகவலை அடுத்து, தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஞாயிறன்றும் “அனந்த்நாக் ஆப்ரேசன்” தொடர்ந்தது.
மகளிர் உரிமைத் தொகை பிடித்தம்: வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
சென்னை, செப். 17- குடும்பத் தலைவிகளுக்கு மாதந் தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித் திருக்கிறார். இந்தியாவில் முதல் மாநிலமாக 10.65 மில்லியன் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத் தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் சேவைக் கட்டணம், ஏற்கெனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்காக சில வங்கி கள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப் பட்டுள்ளன. இந்நிலையில், “இது மிகவும் வருந்த த்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது. இருப்பினும், சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றில் தெரிவித் துள்ளார். “தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர் செய்யக் கூடாது என்று மாநில அரசுக்கும் வங்கி களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய ப்பட்டுள்ளன. அவற்றை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப் படும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையை வங்கிகள் தங்களது நிர்வாகக் காரணங்களுக் காக பிடித்தம் செய்யக்கூடாது என வலி யுறுத்தி, இந்திய நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பெரியார் வாழ்வு ஒரு அரசியல் தத்துவம்: முதலமைச்சர் புகழாரம்
சென்னை, செப். 17- தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சமூக வலைத்தளத்தில் வெளி யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- பெரியார் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்ற வற்றைக் கடந்து-மனிதநேயத்தையும் சுய மரியாதையையும் அடிப்படை யாகக் கொண்ட அரசியலை வலி யுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்ட வடிவம் பெறுவதைப் பார்த்து விட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது! பெண் விடுதலைக்காகவும், சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக் கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஆட்சி போன்றே இந்த முத்துவேல் கரு ணாநிதி ஸ்டாலின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கு காணிக்கை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.