states

புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள்; எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க யோசனை

சென்னை, செப்.6- தமிழ்நாட்டில் புதிதாக 6  மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ்  மருத்துவமனை துவங்க அனு மதிக்கோரி ஒன்றிய அமைச்சரி டம் மாநில  மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு அளித்து வலியுறுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி சென்றுள்ளார். அங்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோன வால் ஆகியோரை சந்தித்து தமிழக அரசின் கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி மனு அளித்தார். அதன் விபரம் வருமாறு:- நீட் தேர்வு குறித்து சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு மீது குடியரசுத் தலைவர் ஒப்புதலை விரைந்து பெற்றுத் தர வேண்டும். மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கோவை மாவட்டத் தில் 2-வது எய்ம்ஸ் மருத்து வமனை நிறுவ வேண்டும்.  மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ ஒன்றிய அரசின் 60:40 என்ற பங்க ளிப்பு திட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக் கல்லூரி களில் அரசு செவிலியர் கல்லூரி நிறுவ நிதி வழங்க வேண்டும். உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்.