states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப் பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி முனிஷ்வர் பண்டரிநாத் வரும் 12-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
  2. இந்திய கிரிக்கெட் அணிகளின் டைட்டில் ஸ்பான்சராக மாஸ்டர் கார்டு (Mastercard) நிறுவனம் தேர்வாகியுள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனம் 2022 முதல் 2023-ஆம் ஆண்டு வரை ஓராண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் அணிக்கும் மாஸ்டர் கார்டு தான் டைட்டில் ஸ்பான்சராக செயல்பட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  3. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் புலனாய்வு செய்திகளை எழுதுவதில் திறன் படைத்தவரான மூத்த பத்திரி கையாளர் ஜெப் ஜெர்மன் (69) அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலை யில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
  4. தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டு கூறிய ஆம் ஆத்மி தலைவர்கள் அதிஷி, துர்கேஷ் பதக், சவுரப் பரத் வாஜ், சஞ்சய் சிங், ஜாஸ்மின் ஷா ஆகிய 4 பேரும் குற்றச்சாட்டு குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு ஆளுநர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  5. டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக ஒன்றிய அரசு சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகுவதற்கு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். 
  6. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு துறைமுகம் அருகே 23 மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 2 மீனவர்கள் உயிரி ழந்தனர். 16 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  7. பாகிஸ்தான் நாட்டில் இடைவிடாமல் மிரட்டி வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள த்தில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 1,300-யை தாண்டி யுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  8. ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில்  தற்கொலைப் படைத் தாக்குதலால் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஹெராட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் மசூதியின் இமாம் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதோடு, மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். முஜிப் ரகுமான் அன்சாரி என்ற இந்த இமாம், ஆப்கானிஸ்தானில் தற்போது அதிகாரத்தில் உள்ள தலிபான் அமைப்புக்கு நெருக்கமானவராவார். கடந்த ஒரு மாதத்தில் கொல்லப்படும் இரண்டாவது தலிபான் ஆதரவு மதத்தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  9. கூகிள் மற்றும் அமேசான் ஆகிய பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இஸ்ரேலுடன் தங்கள் நிறுவனங்கள் போட்டுள்ள உடன்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள். நடவடிக்கை நாள் என்ற பெயருடன் இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இஸ்ரேலுடன் 120 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டமொன்றை மேற்கொள்ள இரு நிறுவனங்களும் அந்நாட்டு அரசுடன் உடன்பாட்டை எட்டியுள்ளன.
  10. லிதுவேனியாவில் தனது படைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே லிதுவேனியாவில் உள்ள ருக்லா என்ற ராணுவப் படைத்தளத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேட்டோ படை வீரர்கள் உள்ளனர். ஜெர்மனி தற்போது அனுப்பும் வீரர்களும், ஆயுதங்களும் இந்த முகாமில் இணைந்து கொள்வதே திட்டமாகும். தங்கள் கூட்டாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கவே இந்த நடவடிக்கை என்று ஜெர்மனி கூறியுள்ளது.
;