பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, ஞானவாபி மசூதி தொடர் பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், முகம்மது நபிகளை அவதூறு செய்து பேசி யது நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றமே தலையிட்டு கேள்வி எழுப்பியது. இந்நிலை யில், நூபுர் சர்மா வெளிநாடுகளுக்கு தப்பிவிடாத வகையில், அவருக்கு எதிராக மேற்குவங்க காவல்துறை லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.