states

‘நீட்டை குழிதோண்டி புதைப்போம்’

சென்னை, ஜூன் 18- சமூகநீதி சக்திகள் வலுவாக ஒன்றி ணைந்து பெரும் போராட்டத்தில் ஈடு பட்டு ‘நீட்’ டைக் குழிதோண்டிப் புதைக்க முன்வரவேண்டும்  என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு   2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங் களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தி யுள்ளது. அவர்களில் 38 மாண வர்களின் பள்ளி, கல்வி வாரியம், நீட் தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி. எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த வர்கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்கு வங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள்.  அதேபோல், விவரங்கள் சேகரிக் கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாண வர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத் தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டி யலினத்தையும் சேர்ந்தவர்கள். சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால், அந்த மாணவர் தில்லியின் புகழ்பெற்ற பொதுப்பள்ளியில் படித்த வர். சாதித்ததாகக் கூறப்படும் அனை வருமே தில்லி, புனே, கொல்கத்தா, நாக்பூர், விஜயவாடா, விசாகப்பட் டினம், சென்னை போன்ற பெருநகரங் களைச் சேர்ந்தவர்கள். அனைவருமே பொருளாதார அடிப்படையில் வலிமை யான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.  இந்த ஆய்வுகளில் இருந்து, நீட் தேர்வு என்பது நகர்ப்புறங்களைச் சேர்ந்த, தனியார் பயிற்சி மய்யங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படிக்கும் அளவுக்கு வசதி படைத்த குடும்பங்களின் மாண வர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் மருத்துவப் படிப்பை ‘நீட்’ தேர்வு ஏழை களுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ‘நீட்’ டிலிருந்து தமிழ் நாட்டுக்கு விதிவிலக்குக் கோரும் சட்ட  முன்வடிவு ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டது போதாது என்று, இப்பொழுது குடியரசுத் தலைவர் மாளி கையில் உறங்குகிறது. இது அரசியல் பிரச்சனையல்ல - பெரும்பாலான மக்களின் ஜீவாதாரமான சமூகநீதிப் பிரச்சனை. சமூகநீதி சக்திகள் வலு வாக ஒன்றிணைந்து பெரும் போராட் டத்தில் ஈடுபடவேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவு மண் மூடிப் போய்விடும், எச்சரிக்கை!. இவ்வாறு வீரமணி தெரிவித் துள்ளார்.