states

தீக்கதிர் விரைவு செய்திகள்

டிஜிட்டலில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம்

சென்னை,செப்.5- கப்பலோட்டிய தமிழன் வ.உ.  சிதம்பரனாரின் 151ஆவது பிறந்ததி னத்தை முன்னிட்டு, செய்தி மக்கள்  தொடர்புத்துறையின் சார்பில், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “கப்ப லோட்டிய தமிழன்” திரைப்படம் டிஜிட் டல் தொழில்நுட்பத்தில் மீட்டுரு வாக்கம் செய்யப்பட்டு சென்னை கலை வாணர் அரங்கத்தில் திங்களன்று (செப்.5) காலை 10.30 மணிக்கு திரை யிடப்பட்டது. இந்த பிரத்யேக காட்சி யினை பள்ளி, கல்லூரி மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்த னர். இன்றும் செப்.6 காலை 10.30 மணி  மற்றும் பிற்பகல் 2.00 மணிக்கும்  காட்சிகளாக நவீன முறையில் சென்னை, கலைவாணர் அரங்கத் தில் திரையிடப்படவுள்ளது. அனுமதி  இலவசம். அனைவரும் கண்டுகளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஜிட்டலில் “கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம்

சென்னை, செப்.5- தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ளது வருமாறு:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 6 ஆம் தேதி  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சி புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 7ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் அநேக இடங்களில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி,  கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

சிலி : புதிய அரசியல் சட்டம் நிராகரிப்பு

சாண்டியாகோ, செப்.5- புதிய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்ற வினாவுக்கு, வேண்டாம் என்று தென் அமெரிக்க நாடுகளில்  ஒன்றான சிலியின் மக்கள் வாக்களித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அரசியல் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பிற்குப் பின், நான்கில் மூன்று பங்கு வாக்குகள் எண்ணப்பட்டிருந்த நிலையில், 62 விழுக்காடு மக்கள் புதிய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், 38 விழுக்காடு மக்கள் ஆதரவாகவும் வாக்களித்திருந்தார்கள்.  மேலும் 25 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருந்தாலும், வேண்டாம் என்ற மக்களின் தீர்ப்புதான் இறுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  கடந்த ஓராண்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல் நிர்ணய சபை உரு வாக்கிய 388 அம்சங்கள் கொண்ட புதிய அரசியல் சட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால், சிலியின் இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகள், புதிய அரசியல் சட்டம் உருவாகும் பணி தொடர வேண்டும் என்றே விரும்புகின்றன. இந்தப் பணி தொடர்வதற்கான ஒப்புதலைத் தரும் உடன்பாடு வரும் நாட்களில் ஏற்படுத்தப்படும். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான அம்சங்களைக் கொண்ட புதிய அரசியல் சட்டத்திற்கான முன்மொழிவு மீண்டும் முன்வைக்கப்படும். பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிலி குடிமக்கள் அந்தந்த நாடுகளில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். சிலியில் வசிப்பவர்களுக்கும், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் இடையில் புதிய அரசியல் அமைப்பு பற்றிப் பெரிய கருத்து வேறுபாடுகள் இருப்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஓரிரண்டு இடங்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளிலும் வசிக்கும் சிலி குடிமக்கள், புதிய அரசியல் சட்டம் வேண்டும் என்றே வாக்களித்திருக்கிறார்கள். 

 

;