இஸ்ரேல்-காசா போர் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
பெங்களூரு, அக். 10 - இஸ்ரேல் - பாலஸ் தீனத்தின் ஹமாஸ் இயக்கத் தினருக்கு இடையிலான போரால், கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4.18 டாலர் அல்லது 4.94 சதவிகிதம் உயர்ந்து, பேரலுக்கு 88.76 டாலர்களாக விற்பனையானது.
காவிரியில் 7,973 கன அடி நீர் திறப்பு
பெங்களூரு, அக். 10 - கர்நாடக மாநிலத்தி லுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, திங்க ளன்று இரவு விநாடிக்கு 5,973 கன அடி, கபினி அணை யிலிருந்து 2 ஆயிரம் கன அடி என ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு 7 ஆயிரத்து 973 கனஅடி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
இன்றே கூடும் ஒழுங்காற்றுக் குழு
புதுதில்லி, அக்.10- காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் அக்டேபார் 12- அன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலை யில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக புதனன்று (அக்.11) நடைபெறுமென அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார்.
ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்
சென்னை, அக்.10- சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.ராசாநிறுவனத்தின் 15 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அம லாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பற்றி பேச தனபாலுக்கு நிரந்தரத் தடை
சென்னை, அக்.10- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேச முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர்க்கு நிவாரணம்
மதுரை, அக்.10- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையை அடு த்துள்ள கங்கர்செவலில் தனி யார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரி ழந்த கணேசன்(42), ராஜா, (38) ஆகியோரின் குடும்பங்க ளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.3 லட்ச மும், காயமடைந்தவர்களு க்கு தலா ரூ.1 லட்சமும் நிவா ரணம் அறிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை
கரூர், அக்.10- கரூர் அருகே உள்ள மல்லம்பாளையம் மற்றும் நன்னியூரில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் அக்.10-ஆம் தேதி (செவ்வா ய்க்கிழமை) சோதனை நடத்தினர்.
விடுதலைப் போராட்ட வீரர் வி.ராதாகிருஷ்ணன் மறைவு: சிபிஎம் இரங்கல்
சென்னை, அக்.10- விடுதலைப் போராட்ட வீரர் தோழர் வி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத் துள்ள இரங்கல் செய்தி வருமாறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் வி. ராதாகிருஷ்ணன் (102) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றோம். அவரது மறை விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் வி. ராதாகிருஷ்ணன், பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த வர். ரஜினி பாமிதத், மோகன் குமாரமங்க லம் உள்ளிட்ட தலைவர்களின் மேடைச் சொற்பொழிவுகளை தமிழில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்தவர். தனது இருப தாவது வயதிலிருந்து ‘ஜன சக்தி’யில் பணி யாற்றிய அவர், ‘சோவியத் லேண்ட்’ அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக வும் இருந்து, பல ஆங்கில நூல்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்துள் ளார். என்.சி.பி.எச். நிறுவனத்திலும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். தோழர் ராதாகிருஷ்ணன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்வதோடு அவரை இழந்து வாடும் அவருடய மகள்கள், குடும்பத்தார் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அனு தாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
அரசியல் தீர்வு காண சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட சீனா முயற்சி
பெய்ஜிங், அக்.10- பாலஸ்தீன-இஸ்ரேல் சூழ்நிலை குறித்து சீன வெளியுறவு அமைச்ச கத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் திங்களன்று கூறுகை யில், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத் தும் செயலை சீனா கண்டிப்பதோடு, பிர தேச நிலைத் தன்மையைச் சீர்குலைக் கும் நடவடிக்கையும் எதிர்க்கிறது என்றார். மேலும், சர்வதேச சமூகம் பய னுள்ள முறையில் பங்காற்றி, இச்சூழ்நிலையை தணிவுப்படுத்துவ தையும், அரசியல் வழிமுறையின் மூலம் பாலஸ்தீனப் பிரச்சனையை வெகு விரைவில் தீர்ப்பதையும் முன்னேற்ற வேண்டும். சீனா சர்வதேச சமூகத்து டன் இணைந்து இதற்கு விடா முயற்சி களை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். அப்பாஸ் வேண்டுகோள் ஐ.நா இதில் உடனடியாகத் தலை யிட வேண்டும் என்றும் காசா பிரதே சத்துக்கு மருத்துவ சிகிச்சை உதவி யளிக்க வேண்டும் என்றும் பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா தலைமை செயலாளர் குட்ரெ ஸூடன் 9ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். நிலைமை தொடர்ந்து தீவிர மடையாமல் தவிர்க்கும் வகையில், தொடர்புடைய தரப்புகளுடன் ஐ.நா தொடர்பு மேற்கொண்டுள்ளதாக குட்ரெஸ் கூறினார்.
ஊடகங்களை கட்டுப்படுத்தும் சங்பரிவார் எம்.சுவராஜ் குற்றச்சாட்டு
மட்டனூர், அக்.10- இந்தியாவில் ஊடகங் களை சங்பரிவார் வாயடை க்கச் செய்து வருகிறது. நாட்டிலும் கேரளாவிலும் உள்ள அனைத்து முக்கிய ஊடகங்களும் அமைதியாகி விட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பி னர் எம்.சுவராஜ் கூறினார். சிபிஎம் நாயாட்டுப் பாறை உள்ளூர் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த தேசாபி மானி குடும்பக் கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசுகையில், கேர ளாவின் அனைத்து நல்ல விசயங்களையும் ஊட கங்கள் எதிர்த்து வருகின்றன சாதனைகளை மறைத்தும் வருகின்றன. மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிர்ப்பை யும், பரிவாரக் கும்பல்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டை யும் அனைத்து முக்கிய ஊடகங்களும் எடுத்து வரு கின்றன. இதற்கிடையில், தேசாபிமானி மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை சரியான செய்திகளுடன் முன் னிலைப்படுத்தி முன்னோ க்கி நகர்கிறது என்று சுவராஜ் தெரிவித்தார்.
மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை; முதல்வர் அறிவிப்பு
சென்னை,அக்.10- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தில் மேல்முறையீடு செய்வோரில் தகுதியானோருக்கு ரூ.1,000 தரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (அக்.10) கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது உரையாற்றிய அதிமுக உறுப்பினர் உதயகுமார், மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்குவோம் எனக் கூறிய வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார் அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், “தகுதியுள்ள அனை வருக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிதி நிலைமை படுமோசமாக இருந்தது. இதனால் தாமதமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது”என்றார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர். உரிமைத் தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் தெரிவித்தால் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை: சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை, அக். 10- தமிழ்நாட்டில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. மகளிர் உரிமைத் வழங்கப்படாத மகளிர் கோரிக்கை குறித்து சட்டப் பேரவையில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய நாகைமாலி, “திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவித்தொகை அல்ல அது மகளிர் உரிமைத் தொகை வழங்கு வோம் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்போது ஒரு கோடியே ஆறு லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கு எங்கள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார். அதே நேரத்தில் நாங்கள் தொகு திக்கு செல்லும் போது பல இடங்களில் தகுதியானவர்களுக்கூட மகளிர் உரிமைத் தொகை விடுபட்டிருக்கிறது என்று கோரிக்கை வருகிறது. எனவே, நியாயமாக கிடைக்க வேண்டிய பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி
சென்னை,அக்.10- தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று (அக்.10) நடந்த கேள்வி நேரத்தில், அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் மதுராந்தகம், தொகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு ‘தோழி விடுதி’ அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன்,“ மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது”என்றார். தற்போது சென்னை, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், நெல்லை, சேலம், திருச்சி, கூடுவாஞ் சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, புனித தோமையார் மலை ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். இரங்கல் சென்னை, அக்.10- தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வா யன்று (அக்.10) கூடியதும் திருவண்ணா மலை மாவட்டம் போளூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ. ராஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.