states

அனைத்துக் கல்லூரி, பல்கலை. களில் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு அறிமுகம்

புதுதில்லி, அக்.20-  அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் சைபர் செக்யூரிட்டி படிப்புகளின் பாடத்திட்டத்தை அமல்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைந்த கல்லூரிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக் கொண்டுள்ளது.  இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  சைபர் செக்யூரிட்டி பாடத்திட்டத்தில் சைபர் பாதுகாப்பு, சைபர் கிரைம் மற்றும் சைபர் சட்டம், சமூக ஊடக கண்ணோட்டம் மற்றும் பாதுகாப்பு, இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல், டிஜிட்டல் சாதனங்கள் பாதுகாப்பு, கருவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பங்கள் ஆகிய பாடத்திட்டங்கள் இடம்பெறும்.

;