திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பை யாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை யில் பேசிய விஜயபாஸ்கர், “புதுக்கோட்டை நகரத்தில் வடக்கு மற்றும் தெற்கு நகரச் செயலாளர்கள் உள்ளீர்கள். இதில், மதிமுக வேட்பாளரைவிட ஒரு ஓட்டாவது கூடுதலாக வாங்கித் தரும் நகரச் செயலாளருக்கு இன்னோவா காரும், வட்டச் செயலாளருக்கு 5 சவரன் தங்க நகையும் பரிசளிக்கிறேன்” என்றார். ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருந்தால் அல்லவா அது நிர்வாகிகளுக்கு உற்சாகத்தைத் தரும். மதிமுக வேட்பாளரைவிட ஒரு ஓட்டுகூட கூடுதலாகப் பெற முடியாது என்பதை உணர்ந்தே, அவர் இன்னோவா கார் பரிசளிப்பதாக தொடை தட்டுவதாக அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்ததைப் பார்க்க முடிந்தது.