states

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு நேர்மையான, சுதந்திரமான விசாரணைக்கு நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை, செப்.20- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி  வழக்கில் நேர்மையான, சுதந்திர மான விசாரணை நடைபெறு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனிதம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய கடி தத்தில் கூறியிருப்பதாவது: மிகுந்த வேதனையுடனும், கவ லையுடனும் இதில் கையெழுத்திட் டுள்ள சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து போயுள்ள கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சம்பந்தபட்ட ஐந்து எதிரிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன்  மனுக்களில் (எண்கள் 20088, 20135 /  2022) 26.08.2022 அன்று பிறப்பித்  துள்ள உத்தரவில் சொல்லப்பட் டுள்ள சில அம்சங்கள் எங்களை மிக வும் கலக்கமடையச் செய்துள் ளது.

இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட்டிருக்காத, சிபிசிஐடி போலீசாரின் புலன் விசாரணையில் இருந்து வருகின்ற ஒரு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி இறுதி முடிவே எடுத்துள்ளார். ஜாமீன் மனு விசாரணையின்போது பின்  பற்றப்பட வேண்டிய வழிமுறை கள் குறித்து உச்சநீதிமன்றம் கூறி யுள்ள தீர்ப்புகளுக்கு முரணாக இந்த உத்தரவு உள்ளது. குற்றம் தொடர்பான சாட்சி, ஆதாரங்கள் நிலை நிறுத்தப்படவில்லை என்  றும், இந்த குற்றம் வன்புணர்வோ, கொலையோ அல்ல என்றும் நீதி பதி தனது உத்தரவில் கூறியுள் ளார். தற்கொலை செய்து கொள்வ தற்கு முன்பாக மாணவியால் எழு தப்பட்டதாக சொல்லப்படும் கடி தத்தில் உள்ள கையெழுத்துக்கள் தனது மகளுடையது அல்ல என மாணவியின் தாயார் மறுத்  துள்ள நிலையில், அந்த கடிதத்தை நீதிபதி ஆதாரமாக ஏற்றுக் கொண்  டுள்ளார். மேலும், பள்ளியின் சுவற்  றில் உள்ள ரத்தக் கறையானது பெயிண்ட்டால் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் ரத்தம் இல்லை  என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். நீதிபதியின் இந்த  முடிவுகள், தேவையற்ற கருத்துக் கள் வழக்கின் இறுதி முடிவையும், விசாரணை நீதிமன்றத்தையும், புலன் விசாரணையையும் பாதிப் படையச் செய்யும்.

ஜாமீன் கேட்டு தாக்கல் செய் யப்பட்டுள்ள மனுவில், அந்த மனுவின் நோக்க எல்லைக்கும் அப்பால் சென்று வழக்கின் தகுதி யையே நீதிபதி முடிவு செய்துள் ளார். இன்னும் இறுதி முடிவுக்கு உட்படுத்தப்பட்டிருக்காத பிரேத பரிசோதனை சான்றிதழ், வல்லு நரின் கருத்துக்களின் அடிப்படை யில் நீதிபதி மேற்குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளார். சிறுமியின் பிறப்புறுப்பை சுற்றி காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை சான்றிதழில் காணப்படவில்லை என்பதினால் வன்புணர்வு குற்றமே நடைபெறவில்லை என முடிவு செய்துள்ளார்.

பிரபலமான மதுரா வழக்கில் 1979 ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்த ரவின் தொடர்ச்சியாக 1983 ஆம் ஆண்டு வன்புணர்வு தொடர்பான குற்றங்களில் நாடாளுமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் எங்கள் கவனத்திற்கு வருகின்றது. வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் குற்றம் தொடர்பாக ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து வந்த கருத்துக்களில் 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு பெரும் மாற்றங்  கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த அம்சங்களை நீதிபதி  கவ னத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. எனவே, சென்னை உயர்நீதி மன்றத்தால் ஜாமீன் மனுவில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் காரணமாக பெரும்பாலான பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தங்களது நீதிமுறையான கவனத்திற்கு கொண்டு வரு கின்றோம். நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என்ற முறை யில், இறந்துபோன பள்ளி சிறுமி யின் வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக நேர்மையான, சுதந்திர மான விசாரணை நடைபெறுவ தற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;