states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை?

ஹைதராபாத், நவ.11- தெலுங்கானாவில் நவம் பர் 30 அன்று சட்டமன்ற தேர்  தல் நடைபெறுகிறது. இந்  நிலையில், ஜன்மத் அமைப்பு நடத்திய புதிய கருத்துக் கணிப்பில்  காங்கிரஸ் மற் றும் பிஆர்எஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்  றும்  தொங்கு சட்டசபை உரு வாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மொத்தமுள்ள 119  இடங்களில் பெரும்பான் மைக்கு 60 இடங்கள் தேவை  என்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சி கள் 53-55 இடங்களில் வெல்  லும் பாஜக 4 அல்லது 5  இடங்களில் மட்டுமே வெல் லும்; ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி வழக்கம் போல 6, 7  இடங்களில் வெல்லும்  என்று  ஜன்மத் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

தில்லியில் நிலநடுக்கம்

புதுதில்லி, நவ.11- தலைநகர் தில்லியில் சனி யன்று பிற்பகல் 3.36 மணியள வில், ரிக்டர் அளவு கோலில் 2.6 அளவில் நிலநடுக்கம் ஏற்  பட்ட நிலையில், மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். 

மோடியின் பாட்டுக்கு கிராமி விருது

புதுதில்லி, நவ.11- இசையுலகின் சர்வதேச உயரிய விருதான ‘கிராமி விருது’க்கு பிரதமர் மோடி இணைந்து இயற்றிய ’அபன்  டன்ஸ் இன் மில்லட்ஸ்’ இசைப்பாடல் பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

கருக்கா வினோத் மீது குண்டர்சட்டம்

சென்னை, நவ.11- சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சாலையில் கடந்த அக்டோ பர் 25-அன்று பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா  வினோத்(42)  கைது செய் யப்பட்டார்.  5 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட் டார். இந்த நிலையில், கருக்கா  வினோத்தை  குண்டர் தடுப் புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளார்.